வலசை சென்ற வண்ண மயில்கள்!

தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களால் இணைந்து எழுதப்பட்ட முதல் ஹைக்கூ தொகுப்பான 'வலசை சென்ற வண்ண மயில்கள்' நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது.
வலசை சென்ற வண்ண மயில்கள்!
Published on
Updated on
1 min read

பொ.ஜெயச்சந்திரன்

தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களால் இணைந்து எழுதப்பட்ட முதல் ஹைக்கூ தொகுப்பான 'வலசை சென்ற வண்ண மயில்கள்' நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ் அமெரிக்கா டி,வி.யும், நூலேணி பதிப்பகமும் இணைந்து நடத்திய இந்த விழா குறித்து எழுத்தாளர் மேனகா நரேஷ் கூறியது:

'உலக ஹைக்கூ கவிதை நாளான்று பங்கேற்ற நாங்கள் ஒன்றிணைந்து ஒரு கவிதை நூல் வெளியீடுவது குறித்து ஆலோசித்தோம். அன்று தோன்றியதே இந்த எண்ணம்.

'வலசை சென்ற வண்ண மயில்கள்' என்ற தொகுப்பின் தலைப்பு எத்தனை அர்த்தங்களைத் தாங்கி நிற்கிறது. வண்ணமயில் ஒரு அழகிய உருவகம். அது பெண்களின் தனித்துவத்தை நினைவூட்டுகிறது.

ஆனால் இங்கே அந்த வண்ணமயில்கள். தாய் நாட்டை விட்டு விலகி, மொழி, கலாசாரம் வேறுப்பட்ட ஒரு புதிய நாட்டில் வாழ்ந்தாலும். தாய்மொழியை மறக்காமல் இருப்பதற்கான சான்றாக இந்த நூல் திகழ்கிறது.

இயற்கை நுணுக்கமான உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள் என பல்வேறு கருப்பொருள் அடங்கிய கவிதைகளைப் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் அளித்திருப்பதைப் பார்க்க முடியும். ஏழு வண்ண மயில்கள் தங்கள் நினைவுகள், நெகிழ்வுகள், நுட்பமான அனுபவங்கள் ஆகியவற்றை மூன்று வரிகளுக்குள் பதிந்திருக்கும் கவிப் பயணம்தான் இது.

ஒவ்வொரு கவிஞருக்கும் 14 பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, 24 ஹைக்கூ கவிதைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தொகுப்பாசிரியர் 'நெல்லை அன்புடன்' ஆனந்தி என்பவர் எங்களையெல்லாம் இணைத்துள்ளார். எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

மற்ற கவிஞர்களும் சிறப்புடையவர்கள்தான்'' என்கிறார் மேனகா நரேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com