வீட்டுக் குறிப்புகள்...

மஞ்சளை நெருப்பில் இட்டு அதில் இருந்து வரும் புகையை முகர்ந்தால், தலைவலி, நீரேற்றம் குணமாகும்.
மஞ்சள்
மஞ்சள்
Published on
Updated on
1 min read

மஞ்சளை நெருப்பில் இட்டு அதில் இருந்து வரும் புகையை முகர்ந்தால், தலைவலி, நீரேற்றம் குணமாகும்.

பெண்கள் தொடர்ந்து குண்டு மஞ்சள் தூளை பூசி குளித்தால், நல்ல தூக்கம் வரும்.

குடையில் கருப்பு நிறத் துணி மங்கியிருந்தால், அமோனியா கலந்த வெந்நீரில் கழுவுங்கள். புதியதாகக் காட்சியளிக்கும்.

பட்டுச் சேலைகளில் சென்ட்டை தடவினால், அந்த இடம் நைந்துவிடும்.

தயிர்
தயிர்

பாட்டில்களில் துர்நாற்றம் இருந்தால், சிறிதளவு கடுகு போட்டு வெந்நீர் ஊற்றி, 15 நிமிடங்கள் கழித்து கொட்டிவிட்டு, நன்றாகத் துடைத்தால் போதும்.

தயிரை சுடவைத்து, சாப்பிட கூடாது.

சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து, உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.

உடலைப் பலப்படுத்த விரும்புவோர் வேகவைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

நன்கு புளித்த தயிரானது ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

மண் சட்டியில் உள்ள தயிர் ஆரோக்கியமானது. புதிய மண் சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊறவைத்த பின்னரே, தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com