உண்ணும் உணவில்...

இந்த உலகத்தில் மனிதன்தான் புத்திசாலி என்ற பெருமை கொண்டு வாழ்கிறான்.
உண்ணும் உணவில்...
Published on
Updated on
1 min read

இந்த உலகத்தில் மனிதன்தான் புத்திசாலி என்ற பெருமை கொண்டு வாழ்கிறான். ஆனால், மனிதனுக்குப் பல விஷயங்களை கற்றுத்தந்தவர்கள் இங்கு வாழும் ஜீவராசிகள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

காக்காய் தன் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடும். பகிர்ந்துகொள்வதன் உயர்ந்த பரிசுத்தத்தைக் கற்றுத்தந்தது.

 சிலந்தி தன் வலையைக் கட்டி, அழிக்கப்பட்டாலும் மனம் தளராமல் மீண்டும் கட்டும். தோல்வியால் பின்னடைந்துவிடக்கூடாது என்பதைக் கற்றுத்தந்தது.

தூக்கணாங்குருவி பொதுவாக ஈச்சமரத்தின் இளங்குச்சிகளில் அழகிய வீடு கட்டும். இன்னும் மனிதனால் கூட அப்படி ஒரு அழகான கட்டிடம் முடியாது.

தேனீ ஒற்றுமை, ஒழுக்கம், சீரமைப்பு, கடின உழைப்புக்குப் பெயர் போனது. ஒரு தேனீக்கூட்டம் ஒர் அரசாங்கம் போல வேலை செய்கிறது.

 எறும்பு சிறியதாயிருந்தாலும், மிகுந்த அமைப்போடு வாழ்கிறது. உழைக்கும் ஆற்றலுக்கும் சேமிப்புக்கும் உதாரணமாக இருக்கிறது.

பூனை, நாய் - மனிதனுக்காக உயிரையும் அர்ப்பணிக்கக் கூடிய உணர்வுகளின் சின்னங்கள். நம்மைவிட மேலான உணர்வுகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜீவராசிகள் அனைவரும் நமக்கான தெய்வங்கள்! அவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறு உணவு, நமக்கு திரும்பும் பெரும் அருள். அவர்கள் பசியை தவிர்த்தால் நம்முடைய பாவங்கள் கூட அழிந்துவிடும். அதனால்தான், தினமும் சிறிதளவாவது உணவை பகிருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com