தேவையான பொருள்கள்:
அரைக்கீரை- 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
உருளைக் கிழங்கு- 2 (தோல் சீவி நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 2 நறுக்கியது
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
சீரகம்- அரை தேக்கரண்டி
பட்டை- சிறு துண்டு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும், பின்னர், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, 1 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும்.
கீரையை நன்றாக வேகவைத்து, மசித்து உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து கிளறி வேகவிடவும். கடைசியாக, சீரகம், பட்டை தாளித்துக் கொட்டி நன்றாகக் கிளறி எடுக்கவும். அரைக்கீரை மசாலா தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.