
தேவையான பொருள்கள்:
முருங்கைக் கீரை- 1 கட்டு
சின்ன வெங்காயம்- 10
பூண்டு- 5 பல்
எண்ணெய்- 4 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம் துருவியது
உப்பு- தேவையான அளவு
துவரம் பருப்பு- அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு, சீரகம்- தலா 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 6
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும், துவரம் பருப்பை நன்கு வேகவைக்கவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு சூடானவுடன் உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும். மேலும், நசுக்கிய பூண்டு, நறுக்கி சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் முருங்கைக் கீரை, உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை நிறம் மாறி, நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல், துவரம் பருப்பையும் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் சில நிமிடங்கள் வேகவிடவும். தேவைப்பட்டால் கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பொரியல் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.