பதினாறு வயதினிலே...

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் பிராஞ்சலி அவஸ்தி, தனது பதினாறு வயதினிலேயே ரூ.100 கோடியிலான ஸ்டார்ட் அஃப்பை உருவாக்கி, சாதனை புரிந்துள்ளார்.
பிராஞ்சலி அவஸ்தி
பிராஞ்சலி அவஸ்தி
Published on
Updated on
1 min read

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் பிராஞ்சலி அவஸ்தி, தனது பதினாறு வயதினிலேயே ரூ.100 கோடியிலான ஸ்டார்ட் அஃப்பை உருவாக்கி, சாதனை புரிந்துள்ளார். "டெல்வ் ஏ.ஐ.' நிறுவனத்தை உருவாக்கிய அவர் எதையும் அறியும் ஆர்வம், ஆழ்ந்தக் கவனம், தொலைநோக்கு சிந்தனை ஆகிய மூன்றின் சரிவிகிதக் கலவை.

இந்தியாவில் பிறந்த பிரஞ்சலியின் கணினி பயணம் ஏழாம் வயதில் தொடங்கியது. கணினி பொறியாளரான தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் "கோடிங்' நிரலாக்க மொழிகளை அவர் கற்றார்.

11-ஆம் வயதில் பிராஞ்சலியின் பெற்றோர், அமெரிக்காவில் குடியேற, அவர் மேம்பட்ட கணினிக் கல்வி வாய்ப்புகளைப் பெற்றார். ஃபுளோரிடாவில் கணினி அறிவியல், போட்டி கணிதப் படிப்புகளில் பிராஞ்சலி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

13-ஆம் வயதுக்குள் புளோரிடா சர்வதேச பல்கலைக் கழகத்தின் இயந்திர நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆய்வகத்தில் பயிற்சி பெற்று. செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் திறமையை வளர்த்துகொண்டார். தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்ட அவர், தரவு பகுப்பாய்வில் பங்களிப்பு செய்தார்.

இந்த அனுபவம்தான் பெரிய நிறுவனம் தொடங்குவதற்கான விதையை விதைத்தது. 2020-இல் ,"ஓபன் ஏ.ஐ. சாட் ஜிபிடி-3' பீட்டாவை வெளியிட்டபோது, பிராஞ்சலியும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆழமாகப் பயணித்தார்.

2022 ஜனவரியில் "டெல்வ் ஏ.ஐ.' நிறுவனத்துக்கு அடிகோலினார் பிராஞ்சலி. இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை அடைப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாக அவர் வடிவமைத்திருந்தார். கல்வி, ஆராய்ச்சி, தொழில்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து, பின்னர் சுருக்கமாகத் தரும் பணியை பிராஞ்சலியின் நிறுவனம் செய்துவருகிறது.

மியாமியில் பிராஞ்சலி இன்னொரு ஏ.ஐ. ஆரம்ப நிறுவனத்தில் இணைந்தார். அங்கு மியாமியில் தனது திட்டங்களை தெளிவாகவும் உறுதியாவும் எடுத்துச் சொல்லி அனைவரையும் ஏற்றுகொள்ளச் செய்தார்.

பிராஞ்சலியின் திட்ட முன்வரைவுகளில் நம்பிக்கை வைத்து "மைக்ரோ சாஃப்ட்' நிறுவனர் பில் கேட்ஸ், "முகநூல்' உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பலரும் முதலீடு செய்துள்ளனர். தற்போது, "டெல்வ் ஏ.ஐ.' நிறுவனத்தில் பத்து பேர் பணிபுரிகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனம், கோடிங், தயாரிப்பு, மேம்பாடுத்துதல், வாடிக்கையாளர் சேவை, ஆதரவு போன்ற செயல்பாடுகளில் முத்திரை பதித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com