
தேவையான பொருள்கள்:
வேர்க்கடலை- 200 கிராம்
கடுகு, வெந்தயம்- தலா ஒரு
தேக்கரண்டி
எண்ணெய்- 50 மில்லி
பெருங்காயத் தூள், மிளகாய் பொடி, உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
புளி- 50 கிராம்
செய்முறை:
புளியை வெந்நீரில் ஊறவைத்து, சிறிதுநேரம் கழித்து ஊறியவுடன் புளிக்கரைசலை எடுத்துவைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயத்தைப் போட்டு வெடித்ததும் வேர்க்கடலையைப் போட்டு வறுக்க வேண்டும்.
அத்துடன் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயத் தூளைப் போட்டு நன்கு புரட்ட வேண்டும். பின்னர், புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிட வேண்டும்.
கொதித்து இறக்கியதும் வாசனைக்கு கறிவேப்பிûயை போட வேண்டும். வேர்க்கடலை புளிக்குழம்பு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.