எதிர்பாராதவிதத்தில் வயிறு வலித்தால் இரண்டு தேக்கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு, தண்ணீர் குடித்தால் வலி போய்விடும்.
மாதவிலக்கின்போது ரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் ஒரு டம்ளர் மோர்விட்டு குடித்தால் ரத்தப் போக்கு கட்டுப்படும்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
பரு வலியுடன் தொல்லை அளித்தால், ஊமத்தம் இலையை மஞ்சளுடன் அரைத்து இரவில் பற்று போட்டு. காலையில் கழுவலாம்.
-முக்கிமலை நஞ்சன்
வசம்புத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டால், தொண்டைக்கட்டு குணமாகும்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
முள்ளங்கியை அவித்துச் சாப்பிட்டால் மூலநோய் நன்கு தணியும்.
கீழாநெல்லி இலையை நன்றாக அரைத்து, பூசி வந்தால் தேமல் மறைந்து சருமம் இயல்வுநிலையை அடையும்.
-உ.ராமநாதன், நாகர்கோவில்.
முட்டைக்கோஸை சமைக்கும்போது, திறந்துவைத்து வேக வைக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறும். வயிற்று உபாதைகளும் வராது.
தக்காளிச் சட்னியில் சில சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தால், சுவை நன்றாக இருக்கும்.
தக்காளி ரசத்துக்கு தாளிதம் செய்யும்போது, சில புதினா இலைகளை வதக்கிச் சேர்த்தால், ரசம் மணமாக இருக்கும்.
-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.