

வெந்தயக் கீரையைப் பச்சையாக மென்று நின்றால் வயிறு எரிச்சல், வயிறு பொருமல் நீங்கிவிடும்.
தூதுவளைக் கீரையின் சாற்றை காலை, மாலை என இரு வேளைகளும் அருந்திவந்தால், உடல் அசதிகள் நீங்கிவிடும்.
பசலைக்கீரையைப் பச்சையாக உண்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.
-முக்கிமலை நஞ்சன்
ஆடாதொடை வேர், கண்டாங்கத்திரி வேர் இரண்டையும் பொடி செய்து தேனில் சாப்பிட நரம்புப் பிரச்னை சரியாகிவிடும்.
அவுரி இலை, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் குடிக்க, காமாலை தீரும்.
குப்பைமேனி சாற்றை சுண்ணாம்பு கலந்து நெஞ்சுக் குழியில் தடவ சளி வெளியேறும்.
வில்வ இலை கஷாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.