
தேவையான பொருள்கள்:
வெந்தயக் கீரை- 1 கட்டு
கம்பு மாவு- 200 கிராம்
கோதுமை மாவு- 100 கிராம்
பெருங்காயம்- 1 சிட்டிகை
கடலை மாவு- 1 மேசைக்கரண்டி
தயிர்- 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய்- 8
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 5 பற்கள்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக் கீரையை காம்புகள் நீக்கிக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொண்டு, எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ள வேண்டும்.
வெந்தயக் கீரையை இறுதியில் சேர்த்து கலக்க வேண்டும். கலவை சப்பாத்தி மாவுப் பதத்துக்கு இருக்க வேண்டும். சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல் இட்டு தோசைக்கல்லில் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.