
தேவையான பொருள்கள்:
வெங்காயம், கோதுமை ரவை- தலா 100 கிராம்
மிளகாய் பேஸ்ட், கேழ்வரகு மாவு- தலா 2 மேசைக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
கோதுமை ரவையை சிறிது தண்ணீர்விட்டு பிசறி வைத்து ஊறியதும் பொட்டுக் கடலை மாவு, கேழ்வரகு மாவு, இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது எடுத்து வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும்.