தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 4 கிண்ணம்
புதிய நெய்- 2 கிண்ணம்
பொடித்த சர்க்கரை- 550 கிராம்
ஏலக்காய்- 8
உதிர்ந்த பழங்கள்- 1 கிண்ணம்
பால்கோவா பொடித்தது- 1 கிண்ணம்
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யில் அரை அளவு இட்டு, அடுப்பை சிறிதாக்கி மாவை அதில் கொட்டி நன்கு கிளறி, அந்த மாவு பிங்க் கலர் வர வேண்டும். பின்னர், அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். மற்றொரு வாணலியில் கோவாவைப் போட்டு, நெய் இல்லாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர், அதை ஆற விடவும். மாவு, கோவா, சர்க்கரை, ஏலக்காய் பொடி, டிரை ஃப்ரூட்ஸ், பாக்கி இருக்கும் நெய் எல்லாம்விட்டு கலக்கவும். நன்கு ஒன்றுசேர்ந்தவுடன் அதை லட்டுகளாகப் பிடிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.