
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு- ஒன்றரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு- அரை கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
வெந்தயம்- 4 தேக்கரண்டி
புழுங்கல் அரிசி- 4 கிண்ணம்
செய்முறை:
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல், அரிசியையும் வெந்தயத்தையும் தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை தனியாக நுரைக்க அரைக்கவும்.
அதேபோல், அரிசி, வெந்தயத்தை இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். பின்னர், இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, தேவையான உப்பு சேர்த்து கரைக்கவும், இரவு முழுவதும் மாவை நன்றாகப் புளிக்க விடவும். காலையில் இட்லிகளாக அவிழ்த்து எடுத்தால், சத்தான துவரம் பருப்பு இட்லி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.