இந்த பழங்களைப் பற்றி தெரியுமா?

சிறுவர்களுக்கு நொறுக்குத் தீனிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் விடுமுறை நாள்களில் அளவுக்கு அதிகம்தான்.
இந்த பழங்களைப் பற்றி தெரியுமா?
Published on
Updated on
1 min read

சிறுவர்களுக்கு நொறுக்குத் தீனிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் விடுமுறை நாள்களில் அளவுக்கு அதிகம்தான். இவற்றைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை பெற்றோர் அளிப்பது நல்லது. அந்த வகையில், சில பழங்களும், அவற்றின் பயன்களும்..:

லிச்சி: வைட்டமின் சி, பொட்டாசியம்,ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்துகள் கொண்டவை. இதனை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். செரிமானம் பராமரிக்கும், இதயம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

அதிக அளவு நீர் உள்ளதால் நீரேற்றத்தை ஆதரிக்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மூளை ஆரோக்கியம் அடையும். புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. உடல் எடையும் குறைய உதவுகிறது. ரத்தத்தில் சிவப்பு அணு உற்பத்திக்கும், உடலில் உள்ள இயற்கை ஆற்றலைப் பராமரிக்கவும் உதவுகிறது.

கொலோஜின் உற்பத்தியாக உதவுவதால் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது.

பப்பாளி: பப்பேன், பல நொதிகள் உள்ளதால் அவை புரதங்களை உடைக்கும். கல்லீரல் கழிவுகளை மிகத் திறமையாக அகற்றும். கல்லீரலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்டுகள் செல்களை சேதம் அடைவதிலிருந்து காக்கும்.

வாழைப்பழம்: இதில் நார்ச்சத்து அதிகம். ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். பொட்டாசியம், வைட்டமின் பி6, மெக்னிசியம் உள்ளன. கல்லீரலில் உள்ள கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும். திரவ சமநிலையைப் பராமரிக்க உதவும். பெக்டின் அதிகம். நச்சுக்களை அகற்றும். செவ்வாழை மிகவும் நல்லது.

ஆப்பிள்: பித்த உற்பத்தியை அதிகரித்து, கொழுப்புகள் ஜீரணிக்க உதவும். கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருள்களை அகற்றும். ஆப்பிளில் உள்ள பெக்டின்,பாலிபினால்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரலை சுத்தப்படுத்தும். சீரம், லிப்பிட் அளவை கட்டுப்படுத்தும்.ஆக்சிஜனேற்றிகள் உள்ளன.

அவகோடா: அழற்சி எதிர்ப்பு பண்புகள், கொழுப்புகளானது கல்லீரலில் ஏற்படும் வீக்கம், சேதத்தைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் கல்லீரலை சேதத்திலிருந்து காப்பாற்றும்.

பெர்ரி பழம்: இவற்றில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றும். இதற்கு அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உண்டு. கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும்.அதிக நார் சத்து கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com