

தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ்- கால் கிலோ
அன்னாசிப் பழம்-1
வெங்காயத் தாள்- 1 தேக்கரண்டி
மிளகு- 5
வினிகர்- 1 தேக்கரண்டி
புதினா இலைகள்- 1 கட்டு
செய்முறை:
முட்டைகோஸை துருவ வேண்டும். அன்னாசியை சிறு துண்டுகளாக்க வேண்டும். வெங்காயத் தாளை பொடியாக நறுக்க வேண்டும். முட்டைகோஸ், அன்னாசி, வெங்காயத் தாளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகை பொடி செய்து போட்டு வினிகர், உப்பு சேர்க்கவும். புதினா இலைகளைக் கையால் கிள்ளியோ, பொடியாக நறுக்கியோ மேலே தூவி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.