ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பாட்டி வைத்தியம்.. நரைமுடி நீங்க இதைச் சாப்பிடுங்கள்!

நரைமுடி நீங்க வேண்டுமென்றால்...

News image
Updated On :2 நவம்பர் 2025, 12:03 am IST

விமலா சடையப்பன்

நரைமுடி நீங்க வேண்டுமென்றால், கறிவேப்பிலையை பச்சையாகச் சாப்பிட வேண்டும்.

மணதக்காளிக் கீரையைப் பாசிப் பயறுடன் கூட்டு சேர்த்து உண்டு வர ரத்த மூலம் குணமாகும்.

பொடுகு நீங்க, கசகசாவைப் பாலில் அரைத்துத் தலைக்குத் தடவி வர வேண்டும்.

-முக்கிமலை நஞ்சன்

வெண்டைக்காய் வதக்கும்போது நூல், நூலாக வரும். அதற்கு ஒரு எலுமிச்சம்பழச் சாற்றை ஊற்றி கிளறினால் நூல், நூலாக வராது.

உளுந்து வடைக்குச் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்தால் மெதுவாக இருக்கும்.

முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி, சாப்பிட்டு வந்தால் ரத்தச் சோகை சரியாகும்.

குழந்தைகள் பால் பாட்டில், டம்ளர் ஆகியவற்றைக் கழுவ புளித்த இட்லி மாவைப் பயன்படுத்தலாம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலந்து குடிக்கவும்.

கொள்ளு ரசம் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும்.

சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி, சம அளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் தாய்ப் பால் பெருகும்.

இடுப்பில் புடவைகட்டி கறுப்பாய் புண்ணாய் இருந்தால், கடுக்காயை சந்தனக் கல்லில் உரசி புண்கள் மேல் தடவினால் கறுப்பு மறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.