தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி- 300 கிராம்
வெந்தயம்- 2 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு- 100 கிராம்
தேங்காய்ப் பால்- நூறு மில்லி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு எல்லாம் ஒன்றாக ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து, களைந்து மைய அரைக்க வேண்டும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். ஆப்பக் கடாயில் மாவை பரவலாக ஊற வைத்து, அடுப்பில் குறைந்த அளவு தீயில் வைத்து, சிறிது எண்ணெய்விட்டு மூடியால் மூட வைத்து, வேகவிட வேண்டும். திருப்பிப் போடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.