தேவையான பொருள்கள்:
உருளைக் கிழங்கு- 4
பெரிய வெங்காயம்-2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய்- 2
சீரகம், மிளகாய்த் தூள்- தலா 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்- தலா 1 மேசைக்கரண்டி
மைதா மாவு- 200 கிராம்
வெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 பிடி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து, மசித்து வைக்க வேண்டும். மைதா மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும். வதக்கியவுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பிசைந்த மாவில் ஒரு உருண்டையை எடுத்து, சப்பாத்தியைப் போல் இட்டு ஒரு கரண்டி உருளைக்கிழங்கு மசாலாவை நடுவில் வைத்து தேய்த்த மாவை மூட வேண்டும். பின்னர், கையால் வட்டமாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு வெந்து எடுக்க வேண்டும்.
ஆர். ஜெயலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

