சுக்கு, மிளகு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு பொடி செய்து, சாப்பிட மூல நோய் குணமாகும்.
ஆட்டுப்பால் வலிப்பு நோயைக் குணமாக்கும்.
வெள்ளரிக்காய் சிறுநீர் அடைப்பைக் குணமாக்கும்.
வாழைத்தண்டு சிறுநீர் கடுப்பைக் குணமாக்கும்.
கோரைக் கிழங்கு கஷாயம் காய்ச்சலைப் போக்கும்.
நொச்சி இலையைக் கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க உடல் வாத நோய்கள் குணமாகும்.
முலாம்பழம் சிறுநீர் பிரச்னையைத் தீர்க்கும்.
மாமரத்தின் கொழுந்து இலையை கஷாயம் வைத்துக் குடிக்க நீரிழிவு நோய் கட்டுப்படும்.
கொன்றை வேர் கஷாயம் குடித்துவர மேகரணம் தீரும்.
சுண்டைக்காய் சமைத்துச் சாப்பிட மூலக்கடுப்பு தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட அறிவுத்தெளிவு ஏற்படும்.
தேங்காய்ப் பால் குடித்துவர வாய் உள்ரணம் குணமாகும்.
மாதுளம்பழம் கஷாயம் வயிற்றுக் கடுப்பைக் குணமாக்கும்.
வில்வ மரப் பூக்களை கஷாயம் வைத்துக் குடித்தால், குடல் வலிமை பெறும்.
நாவல் கொட்டையைப் பொடி செய்து தினமும் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
கோவைக் காயை சமைத்துச் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஜீரணம் மேம்படும்.
வில்வ இலைப் பொடி தொண்டைக் கட்டை குணமாக்கும்.
முருங்கைப் பூவை சமைத்துச் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.