ஐந்து வயதில் விருது!

71 -ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றவர்களில் வயது குறைந்தவர் என்ற சாதனையை திரீஷா விவேக் தோஸர் படைத்திருக்கிறார்.
ஐந்து வயதில் விருது!
Published on
Updated on
1 min read

71 -ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றவர்களில் வயது குறைந்தவர் என்ற சாதனையை திரீஷா விவேக் தோஸர் படைத்திருக்கிறார். நான்கு வயதில், 'நால் 2' படத்தில் நடித்த மராத்தி குழந்தை நட்சத்திரம், செப்டம்பர் 24 -இல் விக்யான் பவனில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.

நாகராஜ் மஞ்சுளே லே தயாரித்த சுதாகர் ரெட்டி யக்கந்தி இயக்கத்தில் 'நால் 2' படத்தில் சிமி (ரேவதி) என்ற பாத்திரத்தில் திரீஷா விவேக் தோஸர் நடித்தார். அவரது இயல்பான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது திரீஷாவுக்கு வயது மூன்று. விருது பெறும்போது வயது ஐந்து.

கமல், தனது சாதனையை 64 ஆண்டுகள் கழித்து முறியடித்த திரீஷாவைப் பாராட்டியதுடன் 'மேடம்' என்றும் அழைத்துள்ளார். தேசிய விருது 'தங்கத் தாமரை', சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுடன் வந்துள்ளது. மேடைக்கு திரீஷா சேலை, நீளமான கைவைத்த ஜாக்கெட் அணிந்து பெரிய மனுஷி போல நடந்து வந்தது இந்தியர்களின் மனதைக் கவர்ந்தது.

திரீஷா மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் சித்தார்த் ஜாதவ் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

திரீஷாவின் வெற்றி ஹிந்தி சினிமாவில் பல வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'நால் 2' குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம், உணர்ச்சிகள் குடும்ப உறவுகளை விவரிக்கிறது. திரிஷாவின் இயல்பான நடிப்பு கதைக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வந்து சேர்த்தது.

படத்திற்குக் கிடைத்த பாராட்டுகளுக்கு திரிஷாவின் நடிப்பும் முக்கியப் பங்கு வகித்தது. திரீஷா முதன் முதலாக நடித்தது 'பெட் புராண்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்தார்த் ஜாதவ், மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற பிரபலங்களுடன் படத்தில் நடித்துள்ளார். அப்பா விகாஸ் தோஸர், அம்மா கெளதமி தோஸர். மராத்தி படமான 'நால் 2' ல் அவரது நடிப்பு உச்சத்தைத் தொட்டது.

தேசிய விருது பெறுவதற்கு முன், திரீஷா 2024-இல் 'ஸீ சித்ரா' விருதினையும், 2025 -இல் மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதினையும் 'நால் 2' -இல் அவரது பங்களிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருதினையும் பெற்றுள்ளார். திரீஷா தோஸர் தற்போது மும்பையின் மீரா சாலையில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட்டில் படித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com