
சக்கரவர்த்தி
'திரிஷ்யம்' முதல் பாகத்தில் சிறுமியாகவும், 'திரிஷ்யம்' இரண்டாம் பாகத்தில் சற்று வளர்ந்தவராகவும் நடித்திருந்தவர் எஸ்தர் அனில். இளைஞியான பிறகு எஸ்தர் நாயகியாக நடிக்க முயற்சி செய்தார். ஆனால் மலையாளப்படவுலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எஸ்தர் ஊடகங்களின் பார்வையிலிருந்து விலகி நின்றாலும், சற்றும் மனம் தளராமல், எந்த நடிகையும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார். ஆம்! லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் பட்டப்
படிப்பு படித்து வருகிறார். அங்கு மாணவியாக இருப்பது குறித்து அவர் சொல்வது:
'நான் மும்பையில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்த கையோடு, புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, தற்காலிக வேலையில் சேர்ந்துள்ளேன். மேம்பாட்டுப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற தொடர்ந்து அங்கேயும் படிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளேன்.
இப்போது 'த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறேன். தொடர்ந்து மூன்று பாகங்களில் நடிப்பது என்பது அரிய வாய்ப்பு. அதை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.
சினிமா உலகத்திலிருந்து கல்விக்கு மாறுவது ஒரு சவால்தான். அதைவிட வெளிநாட்டில் படிப்பது இன்னொரு சவால். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படிப்பது எனது கனவாக இருந்தது. அது நிறைவேறிவிட்டது. பட்டமளிப்பு விழா டிசம்பரில் நடைபெறும் .
நான் மனம் திறந்து பேசும் டைப் அல்ல. சில ஆண்டுகளாக செய்தி ஊடகங்கள், ரசிகர்களிடமிருத்து விலகி இருக்கிறேன்.
செய்திகளில் நான் இடம் பெறாததால், மக்கள் தங்கள் அனுமானங்களைச் செய்ய அனுமதிப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் கதாநாயகியாகவோ அல்லது வேறு எதுவாகவோ மாற மிகவும் கடினமாக முயற்சிக்கிறேன் என்று அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும் என்று இருந்துவிட்டேன்!'' என்கிறார் எஸ்தர் அனில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.