
தேவையானவை:
அம்மான் பச்சரிசி இலை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
கடுகு - சிறிது
மிளகாய் வற்றல் - 4
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் - அரை மூடி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பற்கள்
செய்முறை:
அம்மான் பச்சரிசி இலையைச் சுத்தம் செய்து, கழுவி, நறுக்கி, வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்தம் பருப்பு, பூண்டு, கடுகு, மிளகாய் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
வதக்கிய இலை, வறுத்த பொருள்கள், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் துவையல் ரெடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.