
தேவையானவை:
குட மிளகாய், பச்சைப் பட்டாணி-தலா 200 கிராம்
அரிசி- 100 கிராம்
தக்காளி -1
முந்திரிப் பருப்பு-5
ஒடித்த வெங்காயப் பட்டை-
சிறிதளவு
ஏலக்காய்- 3
சிறிய மிளகாய் வற்றல்- 5
சீரகம்- அரை தேக்கரண்டி
நெய்- 3 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி- சிறிதளவு
கடுகு- கால் தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை தண்ணீர்விட்டு களைந்து வடிய வைக்க வேண்டும். பட்டாணியை உரித்து, தண்ணீரில் போட வேண்டும். குடமிளகாயைச் சுத்தப்படுத்தி சிறிய துண்டுகள் செய்ய வேண்டும். முந்திரிப் பருப்பையும் சிறிய துண்டுகள் செய்ய வேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பில் வைத்து முதலில் முந்திரிப் பருப்பை கருகாமல் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசி, பட்டாணி இரண்டையும் போட்டு வறுத்து தேவையான தண்ணீர்விட்டு அளவாக உப்பையும் சேர்த்து ஆவியில் வேகவிட வேண்டும். மிளகாய் வற்றல், சீரகம், லவங்கப் பட்டை, ஏலக்காய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை அரைத்து, மிளகாயில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறிது துண்டுகள் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு வெடித்தவுடன் தக்காளி, மிளகாய், மஞ்சள் முதலியவற்றைத் தாளிதத்தில் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். வெந்தச் சாதத்தில் முந்திரிப் பருப்பை வதக்கி, மிளகாய், நெய் ஆகியவற்றைவிட்டு நன்றாகக் கலக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.