
தேவையானவை:
புழுங்கல் அரிசி- 200 கிராம்
உளுந்து- 100 கிராம்
வெந்தயம்- கால் தேக்கரண்டி
துவரம் பருப்பு, சீரகம்- தலா 1
தேக்கரண்டி
சிறிய வெங்காயம்- 5
பச்சை மிளகாய்-1
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத் தண்ணீரை விட்டு ஊறவைத்து, களைந்து எடுத்து உரித்த வெங்காயம், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து, உப்பு போட்டு கலக்க வேண்டும்.
மறுநாள் காலையில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை தோசையாகவிட்டு, மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, வெந்தெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.