இலங்கை இனக் கலவரத்தால், வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரியசாமி - முத்துலட்சுமி தம்பதியர் தங்களது மூன்று மகன்கள், ஒரு மகளுடன் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்துவந்தனர்.
25 ஆண்டுகளுக்கு முன்னர், இவர்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமத்திவேலூரில் இலங்கை மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்தனர். இவர்களது இளைய மகன் விமலநாதன்- கமலேஸ்வரி தம்பதியரின் மகள் டிசாதனா, தொலைக்காட்சிகளிலும், இன்னிசை மேடைகளிலும் தனது இனிய குரலால் ரசிகர்களை இசையால் கட்டிப் போட்டு வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'நான் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதே நடனமாடி, அனைவரின் பாராட்டையும் பெற்றேன். பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் இருந்தது. எனது பெற்றோரும் ஊக்கப்படுத்தினர்.
தொலைக்காட்சிகளில் பாடல்கள் பாடும் போட்டிகள் பங்கேற்பதற்காக, நாமக்கல்லைச் சேர்ந்த வினோத் கண்ணன் என்ற ஆசிரியரிடம் பயிற்சியைப் பெற்றேன். எனது பத்தாவது வயதில் 'ஜி தமிழ்' தொலைக்காட்சி நடத்திய 'சரிகமப' பாடல் போட்டியில் பங்கேற்று, இரண்டாம் பரிசைப் பெற்றேன்.
'சூப்பர் சிங்கர்' பாடல் போட்டியில் தேர்வாகியுள்ளேன். மருத்துவப் படிப்புப் படித்து வரும் எனது கல்விச் செலவு முழுவதையும் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நடுவர் மிஷ்கின் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்'' என்கிறார் டிசாதனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வலுவான நிலையில் நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் செய்ய வேண்டியதென்ன?

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!
விசில் வித்தகர்...
குரல்தான் அழகு...
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

