கோவைக்காய்

கோவைக்காயின் தாயகம் இந்தியா. இது பல்லாண்டு வாழும் கொடி வகைத் தாவரமாகும்.
கோவைக்காய்
Published on
Updated on
1 min read

கோவைக்காயின் தாயகம் இந்தியா. இது பல்லாண்டு வாழும் கொடி வகைத் தாவரமாகும். இதன் இலைகள் பசுமையாகவும், சிறிது தடித்தும் இருக்கும். கோவைக்காய் கசப்பாகவும், கனி இனிப்பாகவும் இருக்கும். கோவைத் தாவர வேரில் ரெசின், அமைலிக் ஆல்கஹால், ஆல்கலாய்டு, ஸ்டார்ச், பிசின், கொழுப்பு, எண்ணெய், அங்கக அமிலங்கள் போன்றவை அடங்கியுள்ளன.

இதன் தாவரவியல் பெயர் 'காக்சினியா இண்டிகா' என்பதாகும். இது 'குக்குர்பிட்டேசியே' என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது. தமிழில் இரத்தப்பலை, விம்பிகை, துண்டகேரி எனப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

கோவைக்காயைக் கூட்டாக, பொரியலாக, குழம்பாக தயார் செய்து உண்ணலாம்.காய்களை நறுக்கி, உப்பு நீரில் ஊறவைத்து, உலர வைத்து பொரித்து உண்ணலாம்.பழத்தை அப்படியே உண்ணலாம். இலையை அரைத்து அல்லது சாறு எடுத்துப்பயன்படுத்தலாம். தண்டு, வேர்ப் பகுதிகளை கஷாயமாக்கிப் பயன்படுத்தலாம்.

மருத்துவப் பயன்கள்:

 காய்களை சமைத்து உண்ண உடல் குளிர்ச்சி பெறும்.

 இது வாய்ப்புண், நாக்கு வெடிப்பு இவற்றைக் குணப்படுத்தும்.

 கைப்பிடி இலைகளை எடுத்துச் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் சாறுடன், சிட்டிகை மிளகு பொடி கலந்து அருந்த இருமல், சளி குணமாகும்.

 கைப்பிடி இலைகளை நெய் விட்டு வதக்கி, அதன்பின் அரைத்து, பட்டாணி அளவு ஒரு நாள் மூன்று முறை உண்ண, இரு நாள்களில் வயிற்றுப்புண் ஆறும்.

 இலைகளை அரைத்து கட்டிகள் மேல் பூசிட கட்டி பழுத்து உடையும், புண் ஆறும்.

 அரை லிட்டர் நல்லெண்ணெய்யில் கால் லிட்டர் கோவை இலைச்சாறு கலந்து காய்த்து வைத்துக் கொண்டு தேமல், படை, பற்று இதன் மேல் பூசிட இவை குறையும்.

 கோவைக்காயை பச்சையாக அடிக்கடி உண்ண தொண்டை வலி, வயிற்றுப்புண் நீங்கும்.

 இலையைப் பிழிந்து சாறு எடுத்து நெய்யில் கலந்து தீப்புண், புண்கள் மேல் பூசி வர இவை ஆறும்.

 அடிக்கடி கோவைக்காயை உணவில் சேர்த்து வர நீரிழிவு, ரத்த அழுத்தம், சயரோகம் போன்றவை குணமாகும்.

 கோவை இலையை அரைத்து வெண்ணெய்யில் குழைத்து சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை ஆறும்.

 கோவைக்காய் கண் பிரச்னைகளைக் குணப்படுத்தும் .

 காயானது சிறுநீரைப் பெருக்கும், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

 வாய்வுத் தொல்லையைக் குணப்படுத்தும்.

 இது ரத்த அழுத்தத்தை சரி செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com