மூட்டு வலி குறைய அத்திப்பாலைச் சேகரித்து, வலி உள்ள இடங்களில் பற்றுப் போட்டால் விரைவில் குணம் அடையும்.
அகத்திக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்து வர, உடல்சூடு தணியும். மலச்சிக்கல் குணமாகும். பித்தம் குறையும்.
வெற்றிலைக் கஷாயம் கபத்தைப் போக்கும்.
விளக்கெண்ணெயை உள்ளங்காலில் தேய்க்க உடல் குளர்ச்சி அடையும்.
சங்கு இலைச்சாறு சளித் தொல்லையைப் போக்கும்.
அடிக்கடி முள்ளங்கி சாப்பிட வயிற்றுக்கோளாறு சரியாகும்.
ஜாதிக்காய் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.
விளாம்பழம் பித்தத்தைக் குறைக்கும்.
ஆளி விதையை அரைத்துச் சாப்பிட அஜீரணம் குணமாகும்.
கடுக்காய் பவுடர், நெல்லிக்காய்ப் பொடி சேர்த்து, தேனில் சாப்பிட மூக்கடைப்பு குணமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரை ஈரலைக் குணப்படுத்தும்.
பப்பாளிப் பழம் மூலத்தைக் குணப்படுத்தும்.
சுரைக்காய் உடலைச் சீரான எடையில் வைத்திருக்க உதவும்.
அன்னாசிப் பழம் வெள்ளைப்படுதலைக் குணமாக்கும்.
நார்த்தங்காய் பித்தத்தைப் போக்க வல்லது.
அரைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள கண் குளிர்ச்சி அடையும்.
அரச இலையை ஊறவைத்த நீரைப் பருகினால் அதிக தாகம் கட்டுப்படும்.
திரிகடுஞ்சூரணம் ஆஸ்துமாவை குணமாக்கும்.
மாவிலையைக் கொதிக்கவைத்துக் குடிக்க, குரல் கம்மல் குணமாகும்.
கண் பார்வையை பாதாம் பருப்பு மேம்படுத்தும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.