பலாப்பழ அல்வா

பலா சுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து , நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பலாப்பழ அல்வா
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள் :

கனிந்த பலா சுளைகள் - 20

வெல்லம் -100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி ( தேங்காய் பாலாக எடுக்கவும்)

நெய் - 50 கிராம்

பச்சரிசி மாவு - ஒரு தேக்கரண்டி

முந்திரி - 10

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை :

பலா சுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து , நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டு சூடுபடுத்தி கரைந்தவுடன் வடிகட்டி, மசித்த பலாச்சுளையில் சேர்க்கவும்.

கொதிக்க ஆரம்பிக்கும்போது, பச்சரிசி மாவையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து கைவிடாமல் கிளறி நன்றாக சுருண்டு வரும்போது, நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து போட்டு , ஏலப் பொடியைத் தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com