தேவையான பொருள்கள்:
கடலை மாவு, தேங்காய் -
தலா 1 கிண்ணம்
சர்க்கரை- ஒன்றரை கிண்ணம்
நெய் - 200 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
ஏலக்காய் - ஒரு சிட்டிகை
திராட்சை - 4
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்த சூடானதும் சர்க்கரையை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் தேங்காயை அரைத்து அதில் போட்டு கடலைமாவையும் போட்டு கிளறவும். ஏலக்காய் பொடி, முந்திரியை போட்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி நன்றாக கலந்து தாம்பாளத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும். சத்தான ஜூப்ளி கேக் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.