
சப்பாத்திகளைத் தயாரித்து உடனே சூடாகச் சாப்பிட வேண்டும். அவற்றை மூடிவைத்துவிட்டு தேவைப்படும்போது எடுத்து சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதிகச் சுவையாக இருக்காது. எனவே, சப்பாத்தியை செய்யும்போதே சிலவற்றை செய்தால் நீண்ட நேரம் அது மென்மையைக் கொண்டதாக இருக்கும்.
மாவை வெது வெதுப்பான நீரில் அல்லது சூடான பாலுடன் சேர்த்து பிசையலாம். மாவு மென்மையாகவும் சற்று ஒட்டும் தன்மையோடும் இருக்க வேண்டும்.
மாவை உருட்டுவதற்கு முன் அதற்கு சற்று ஓய்வு அளிக்கவும். மாவை ஈர துணியால் குறைந்தது 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஓய்வு கொடுப்பதால் மேலும் மென்மை தன்மையுடன் மாவு எளிதில் உருட்ட வரும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் சேர்த்துப் பிசையும்போது ஈரப் பதத்தைத் தக்க வைத்துத் தரும். சப்பாத்திகளுக்கு மென்மையான சுவையையும் அளிக்கும்.
சப்பாத்தி செய்தவுடன் லேசாக அதன் மீது நெய்யை தடவி வைத்தால், புத்துணர்வுடன் இருக்கும்.
உருட்டும்போது மெதுவாகவும் சமமாகவும் உருட்டவும். அதிகமாக அழுத்தம் தர வேண்டாம். மென்மையான சீரான அடிகளால் சப்பாத்திகள் நன்கு உப்பி சமமாக வேகும். உள்ளே மென்மையாக இருக்கும். சரியான வெப்ப நிலையைப் பராமரிப்பது அவசியம். சப்பாத்திகள் தயாரானவுடன் அவற்றை ஒரு சுத்தமான துணியில் அடுக்கி உடனடியாக காற்று புகாத பாத்திரத்தில் வைக்கவும். எடுத்து பயன்படுத்தும்போது கவனமாகச் சூடுபடுத்தவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.