லோ வோல்டேஜ் ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.
ஜாரில் 3-இல் 2 பங்குதான் பொருளை நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுதுபடும்.
அரிசி மாவு கெட்டியாகத் தேவைப்படும் போது அரிசியை கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டு விடும்.
ஜாரில் போட்டு அரைத்ததும் உடன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரம் கழுவும் போது சேர்த்துக் கழுவலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.
மிக்ஸி பிளேடுகள் சாணை வைக்கவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தை பொறுத்தே நைசாக அரைக்கும்.
மிக்ஸியின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பிளேடுகள் கூர்மையாகி விடும்.
ஜார்களில் ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டு விடும்.
சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.
மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
மிக்ஸி ஓடும் போது திறந்து பார்க்கக் கூடாது.
அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக் கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரிடலாம்.
-எல். நஞ்சன், நீலகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.