கேரளத்தில், கடற்கரைக்காகக் கொண்டாடப்படும் ஆலப்புழா மாவட்டத்துக்கு உள்பட்ட முத்துக்குளத்தில் தேவகி அம்மாவும், அவருடைய தபோவனமும் மிகவும் பிரபலம். "காட்டுப் பாட்டி' என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் இவர், தொண்ணூற்று இரண்டு வயதிலும் அயராது பாடுபட்டு வருகிறார்.
நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் திடீர் விபத்தைச் சந்தித்தார் தேவகி. அவரிடமிருந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட முடியாத நிலையில், அவர் மனதில் தோன்றியதுதான் "தினம் ஒரு செடி நடும் திட்டம்' ஆகும். முதலில் ஒரு குச்சியை உதவியாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். பின்னர், மெதுவாக நடந்துசென்று தொடர்ந்து நட்டதன் மூலம் ஒரு தபோவனத்தையே உருவாக்கிவிட்டார். செடிகளுக்கு இயற்கை உரம் மட்டுமே போடப்படுகிறது. தபோவனத்தின் நடுவில் ஒரு குளம் உள்ளது.
வயலின் கிழக்கு, மேற்கு முற்றங்கள் அடர்ந்த வனப்பகுதியாக மாறியுள்ளன. இன்று இருநூற்றுக்கும் மேற்பட்ட வகை அரிய மூலிகைகள், மரங்கள் உள்ளன. இதனுள் "கமண்டலு' என்கிற "கலாபாஷ்' மரம் உள்ளது. அக்காலத்தில் முனிவர்கள் பயன்படுத்திய கமண்டலம் இதிலிருந்துதான் தயாரானதாம்.
மயில் செடி (கலாதியா மகாயனா) , இந்திய கருப்பு பெர்ரி, பலாப்பழம், மாம்பழம், காட்டு பெர்ரி, தேக்கு, மஹோகனி, கருங்காலி, பல்வேறு வகையான அத்தி மரங்கள் போன்றவையும், பொது வகையிலிருந்து லட்சுமி தரு மற்றும் சைனிஸ் ஆரஞ்சு போன்றவையும் இங்குள்ளன. இதனால்புலம் பெயர்ந்து வரும் பறவைகளுக்குப் புகலிடமாக இந்த இடம் மாறியுள்ளது.
இங்கு மருத்துவத் தாவரங்கள் நிறைய உள்ளதால், உயிரியல் பன்முகத்தன்மை, தாவரவியல், புவி வெப்பமடைதல் சார்பான ஆராய்ச்சியாளர்கள் இந்த வனத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். உள்ளுர் மக்களுக்குத் தேவையான மூலிகைச் செடிகள் தபோவனத்தில் இலவசமாய் வழங்கப்படுகின்றன. "இந்திரா பிரியதர்சினி' விருது, "நாரி சக்தி' விருதுகளைப் பெற்ற இவரது சேவைக்கு மகுடமாக, தேவகி அம்மாவுக்கு அண்மையில் "பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்: காங்கிரஸ்

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி
முதல்வர் மட்டுமே ஆட்சி செய்ய அவர் என்ன கடவுளா? - கேரளத்தில் ராகுல் இறுதிகட்ட பிரசாரம்

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

