காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பிரம்ம வர்ஷினி

பவளமல்லியானது சிறு, குறு மரவகையைச் சேர்ந்தது. வீடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் இது சில கோயில்களில் தல விருட்சமாகவும் இருக்கிறது.

பவளமல்லி

Published On :15 பிப்ரவரி 2026, 4:05 am IST

பவளமல்லியானது சிறு, குறு மரவகையைச் சேர்ந்தது. வீடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் இது சில கோயில்களில் தல விருட்சமாகவும் இருக்கிறது.

இம்மலரின் காம்பு சிவப்பு நிறத்தில் பவளம் போன்றும், இதழ்கள் வெள்ளையாக மல்லிகை போன்றும் இருப்பதால் பவளமல்லி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் வாசனை மனதுக்கு ரொம்பவே ரம்யமாக, புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும். இந்த மலர் பூஜைக்கு உகந்தது. ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது.

பொதுவாக மலர்கள் காலையில் மலர்ந்து இரவில் உதிர்ந்து விடும். ஆனால், இது இரவில் மலர்ந்து, காலையில் உதிரும். இதன் வேர் முதல் விதை வரை எல்லாமே மருத்துவக் குணங்களைக் கொண்டது.

இதன் பூவோடு இலையையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், காய்ச்சல் குறையும். கரோனா உள்பட எந்த வகைக் காய்ச்சலாக இருந்தாலும் பூவுடன் இஞ்சி, மிளகு, பூண்டு, மல்லி சேர்த்து கஷாயமாக்கிக் குடிக்கலாம் என சித்த மருத்துவத்தில் சொல்கிறார்கள். மேலும், மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற நரம்பு பிரச்னைகளுக்கு இந்த கஷாயத்தைத் தொடர்ந்து குடித்து வரலாம்.

இதன் காயை நன்கு காய வைத்து, பொடி செய்து, ஒரு பங்குக்கு இரண்டு பங்கு என்ற விகிதத்தில் நல்லெண்ணெய் கலந்து தலை குளித்து வந்தால் பொடுகு, பேன், சிரங்கு, அரிப்பு ஆகியவை குணமாகும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இது மலர்வதால் 'பிரம்ம வர்ஷினி' என்ற பெயரும் இதற்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.