உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முகத்தில் எண்ணெய்ப் பசை வழிகிறதா?

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.

Published On :

ஆர்.ஜெயலட்சுமி

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

சிறிது கடலை மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு விட்டுக் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் எண்ணெய்ப் பசையைக் குறைக்கலாம்.

Story image

எண்ணெய் வழியும் முகத்தைச் சமாளிக்க வாரம் ஒரு முறை ஆரஞ்சுச் சாறு கலந்து முல்தானி மட்டியை முகத்தில் பூசிக் காய விட்டு கழுவ வேண்டும்.

ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற விட்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.