மூலிகை மருத்துவம்...

மங்கல மூலிகை மஞ்சள் மேனியைப் பளபளப்பாய் வைக்கும், நோய்க் கிருமிகளை அழிக்கும், தோல் நோய்களைக் குணமாக்கும்.
மூலிகை  மருத்துவம்...
Updated on
1 min read

மங்கல மூலிகை மஞ்சள் மேனியைப் பளபளப்பாய் வைக்கும், நோய்க் கிருமிகளை அழிக்கும், தோல் நோய்களைக் குணமாக்கும்.

அக உறுப்புகளைச் சீராய் இயக்குவதால் அமைந்த பெயர் சீரகம். வயிற்றுவலியைப் போக்கும்; வாய்வுத் தொல்லையை வேரறுக்கும்.

வெந்தயம் தின்னவன் பந்தயம் வெல்வான்' என்ற பைந்தமிழ் பழமொழிக்கேற்ப அது சர்க்கரை நோயைக் குணமாக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.

கொத்துக் கொத்தாய் விதைகள் தருவதால், கொத்துமல்லி இதன் பெயர். பித்தக் கோளாறுகளைப் போக்கும்; பசி ருசியை நன்கு தூண்டும்.

இஞ்சி காய்ந்தால் சுக்காகும். இதுவும் மூலிகை மருந்தாகும். தலைவலியை நன்கு போக்கும்; தொண்டை கரகரப்பைக் குணமாக்கும்.

உடல் மெலிந்து வலு இழந்தவர்கள் தினம் ஒரு செவ்வாழைப் பழத்தைத் தின்றுவர உடல் வலுப்பெற்று இயல்பாகும். இந்தப் பழத்தில் வைட்டமின் "ஏ' உள்ளதால், கண்பார்வையை அதிகரிக்கும். தூக்கமில்லாது அவதிப்படுபவர்கள் இரவில் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு, பசும்பால் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். ஆரம்பநிலை வாதத்தைப் போக்கும் ஆற்றல் செவ்வாழைப் பழத்துக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com