ஒளி விளக்கு!
மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யும் பணியில் ஆண்கள்தான் ஈடுபடுவார்கள்.
மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யும் பணியில் ஆண்கள்தான் ஈடுபடுவார்கள். 'வயர்மேன்', 'லைன்மேன்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பணியில் ஜோதி என்ற பெண் சேர்ந்து, வழக்கமான பிம்பத்தைத் தகர்த்திருக்கிறார்.
'ஜோதி' என்ற பெயருக்கு 'ஒளி' என்று பொருள். அதற்கேற்றவாறு வீடுகளில் வெளிச்சம் தரும் பணியாக அமைந்தது அபூர்வ பொருத்தம்தான். மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில், தமன்காவ்ன் கிராமத்தில் 'லைன் மேன்(?)' பணியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
அவர் கூறியது:
'என்னுடைய பணி 24 மணிநேரமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணி. அழைப்பு வந்தால், நள்ளிரவாக இருந்தாலும் செல்ல வேண்டும். செல்கிறேன்.
பாதுகாப்புக் காலணிகள், உறுதியான கையுறைகளை அணிந்துகொண்டு மின் கம்பங்களில் ஏறுவதோடு, உயர் மின்னழுத்த மின்மாற்றிகள், சிக்கலான மின் இணைப்புகளை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளுகிறேன்.
எனது சொந்த கிராமத்திலேயே பணியில் இருப்பதால், பழுது குறித்த அழைப்பு வந்தவுடன் இருசக்கர வாகனத்தில் உடனே புறப்பட்டுச் செல்கிறேன். மக்களின் மின் பிரச்னைகள் தீர்க்கப்படும்போது, வீடுகளில் இருள் விலகி, வெளிச்சம் பரவும் போது எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது.
உள்ளூர் மின் விநியோகத்தைச் சீராக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், பல காலங்களாக நிலவி வரும் பாலினப் பாகுபாடு சார்ந்த கருத்துகளையும் உடைத்துள்ளேன்.
தைரியத்துடன், பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால், பெண்கள் எந்தச் சிரமமான வேலையையும் சிறப்பாகச் செய்து முடிக்கலாம். இந்தப் பணிக்காக தேர்வு பெற்று பணிக்கான சீருடையைப் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
என் கிராம மக்கள் மிகவும் உற்சாகமடைந்து, அதைக் கொண்டாடும் விதமாக இனிப்புகளை தங்களுக்குள் வழங்கிக் கொண்டார்கள்.'' என்கிறார் ஜோதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

