சிறுகதை: நூலகம் சொன்ன பாடம்!
பள்ளிக்கூட வேன் வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் கோகுலுக்கு அன்று பள்ளித் தேர்வு. ஆனால், கோகுலோ அவனது அறையை விட்டு வெளியே வரவில்லை. ""அம்மா! என் பென்சில் பாக்


பள்ளிக்கூட வேன் வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் கோகுலுக்கு அன்று பள்ளித் தேர்வு. ஆனால், கோகுலோ அவனது அறையை விட்டு வெளியே வரவில்லை.
""அம்மா! என் பென்சில் பாக்ஸ் எங்கே? என் கணக்குப் புக் எங்கே?'' என்று தேடி பொருட்களை சிதறடித்துக் கொண்டிருந்தான். கோகுலின் தந்தை ராகவனுக்கு கோபம் வந்ததை, கோகுலின் அம்மா கல்யாணி புரிந்து கொண்டாள். தேர்வுக்குச் செல்லவிருக்கும் கோகுலை அவர் திட்டிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அம்மா கல்யாணி, கோகுலுக்கு உதவி செய்ய ஓடி வந்தாள்.
ஒரு வழியாக கோகுலின் பென்சில் பாக்ஸ், கணக்குப் புத்தகம், பரீட்சை அட்டை போன்றவற்றை எல்லாம் எடுத்துத் தரவும், பள்ளிக்கூட வேன் வாசலில் வந்து நின்றது. கோகுல் நேராக ஓடிப் போய் வேனில் ஏறிக் கொண்டான். வீடு கொஞ்சம் அமைதியானது.
பள்ளிக்குக் கிளம்புகிற நேரத்தில் கோகுல் செய்யும் அமர்க்களத்தை இரண்டு மூன்று நாட்களாகவே அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த கோகுலின் சித்தி மீனாட்சியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
அவள் தன் அக்கா கல்யாணியிடம், ""அக்கா! கோகுல் தினமும் இப்படித்தான் நடந்து கொள்கிறானா?'' என்று கேட்டாள்.
அதைக் கேட்ட கல்யாணி, ""ஆமாம், என்ன பண்ணுறது? கோகுல்கிட்ட பல தடவை சொல்லிப் பார்த்தாச்சு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...