92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுவர் பாடல்: அன்னை தெரசா!

அன்பே வடிவாய்த் திகழ்ந்தவராம் அன்னை தெரஸô பெண்மணியாம் கருணைப் பொங்கிட வறியோர்க்குக் கனிவாய் சேவை செய்தவராம்! ஏழைக் குழந்தைகள் அறிவுபெற கருத்தாய் கல்வி அளித்தவராம் ஆதரவில்லா முதியோர்க்கு அடைக்கலம் தந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:53 am

கீர்த்தி

அன்பே வடிவாய்த் திகழ்ந்தவராம்

அன்னை தெரஸô பெண்மணியாம்

கருணைப் பொங்கிட வறியோர்க்குக்

கனிவாய் சேவை செய்தவராம்!

ஏழைக் குழந்தைகள் அறிவுபெற

கருத்தாய் கல்வி அளித்தவராம்

ஆதரவில்லா முதியோர்க்கு

அடைக்கலம் தந்தே காத்தவராம்!

தொழுநோய் கண்டு தவிர்த்தோர்க்கு

தொண்டுகள் பலப்பல புரிந்தவராம்

உறவினர் கைவிட துயருற்றோர்-என்

குழந்தைகள் என்றே உரைத்தவராம்!

சாதியும் மதமும் கடந்திங்கே

உயிர்களை உறவாய் மதித்தவராம்

உலகோர் நலமுற உதவுவதே

இறைவழி பாடென்று சொன்னவராம்!

அன்பே தெய்வத்தின் வடிவமென்று

ஆராய்ந்தால் நாம் உணருவோம்-அன்பு

உருவமாம் அன்னை தெரஸôவை

தெய்வத்தின் நிகராய்ப் போற்றுவோம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.