கடி

***  ""அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றீங்க?'' ""தலை சுத்துதுன்னு சொன்னதுக்கு, யார் சொன்னது... உங்க தலை ஸ்டெடியாதானே இருக்குதுன்னு சொல்றாரே!'' - த.சரவணகுமார், 3/68, லட்சுமண பெருமாள் கோயில் தெரு, ராஜபா
Published on
Updated on
1 min read

***  

""அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றீங்க?''

""தலை சுத்துதுன்னு சொன்னதுக்கு, யார் சொன்னது... உங்க தலை ஸ்டெடியாதானே இருக்குதுன்னு சொல்றாரே!''

- த.சரவணகுமார், 3/68, லட்சுமண பெருமாள் கோயில் தெரு, ராஜபாளையம்-626 117.

***  

""அந்தப் பஸ் ஓடுமா?''

""ஓடும். ஏன் கேட்கிறேய?''

""ஓடும் பஸ்ஸில் ஏறக் கூடாதுன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க. அதான் கேட்டேன்!''

- எம்.அசோக்ராஜா, திருச்சி.

***  

""சூப்பரா டான்ஸ் ஆடத் தெரியும்னு சொன்னான். ஆனா... ஒண்ணுமே சரியில்ல!''

""அப்ப அது "உடான்ஸ்'னு சொல்லு!''

- பி.கோபி, புதுப்பேட்டை.

***  

""மன்னா! போர்க்களத்தில் நீங்கள் போரிடுவதை ஏன் விடியோ கிளிப்பிங்க்ஸ் எடுக்கறீங்க?''

""யாரும் நம்ப மாட்டேங்கறாங்க நான் சொன்னா!''

- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

***  

""டேய்... பாபு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இது என்ன காலம்?''

""மாணவர்களுக்கு நல்ல காலம். டியூஷன் வாத்தியார்களுக்கு நஷ்ட காலம் சார்!''

- சி.முகில்வண்ணன், த.பெ.சித்ராங்கன், 18, அய்யனார் அப்பன் கோயில் தெரு, ஐய்யப்பா நகர் கிழக்கு, காஞ்சிபுரம்-631 501.

***  

""நாய்க் குட்டி வியாபாரம் பண்ணிட்டு இருந்தீங்களே... எப்படி இருக்கு?''

""கைய கடிச்சிடுச்சி!''

- பீ.சேகர், ஊட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com