
ஒரு காலத்தில் ஆந்தையொன்று காட்டில் வாழ்ந்து வந்தது. அந்தக் காட்டிலேயே அதுதான் பெரிய படிப்பாளி. எனவே, அதனிடம் கல்வி கற்று தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள நிறையப் பறவைகள் ஆர்வத்துடன் வந்தன. எல்லாப் பறவைகளுக்கும் ஆந்தை நல்ல முறையில் கல்வி பயிற்றுவித்து வந்தது. பறவைகளுக்கு உலக அறிவை ஊட்டுவது ஒன்றுதான் தன் வாழ்க்கையின் நோக்கம் என்று வாழ்ந்து வந்தது ஆந்தை.
அப்போது ஆந்தை சொன்னது: ""அன்பான மாணவர்களே, நீங்கள் எல்லோரும் நல்லவர்கள். உங்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியும். அந்த அளவிற்கு நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். இனி நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு நல்லபடியாக வாழ்ந்துவிட முடியும். இனி என் உதவி உங்களுக்குத் தேவையில்லை. இங்கிருந்து போக விரும்புபவர்கள் தாராளமாகப் போகலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை!''
ஒரு நாள் ஒரு பறவை ஆந்தையிடம் இன்னொரு பறவையைப் பற்றி குற்றம் சாட்டியது: ""குருவே, இந்தப் பறவை யாருக்கும் தெரியாமல் என் பழத்தைத் திருடிவிட்டது. இதுபோன்று யாரும் இதுவரை செய்தது இல்லை. இதைச் சரியானபடி தண்டிக்க வேண்டும். இதை இப்போது தண்டித்தால்தான் மற்றவர்கள் இதுபோலச் செய்ய அஞ்சுவார்கள்.'' குற்றச்சாட்டைக் கேட்டுக்கொண்டு ஆந்தை மெüனமாக இருந்தது.
ஆந்தை மேலும் சொன்னது: ""ஆனால், இந்தப் பறவையின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்தப் பறவை நன்மை எது, தீமை எது என்று பிரித்து அறியக்கூடிய திறனை இன்னும் பெறவில்லை. தான் என்ன செய்கிறோம், அந்தச் செயலின் தன்மை என்ன என்று இந்தப் பறவைக்குத் தெரிந்தால் இது பழங்களைத் திருடுமா? தவறும் சரியும் இதற்கு ஒன்றாகத்தான் இருக்கிறது. அதுதான் பிரச்னை...''
முதல் நாள் குற்றம் சாட்டப்பட்ட பறவையின் மீது அடுத்த நாளும் அதே பறவை குற்றம் சுமத்தியது:""குருவே, இன்றும் இந்தப் பறவை என் பழத்தைத் திருடிவிட்டது. நான் என் கண்களால் பார்த்தேன். இதை உடனே தண்டித்து வெளியேற்றுங்கள். இல்லையென்றால், மற்றவர்களும் இதைப் பார்த்துக் கெட்டுவிடுவார்கள்!'' ஆந்தை பதில் சொன்னது: ""சரி, இதை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.''
ஆந்தையின் பேச்சை எல்லாப் பறவைகளும் கவனமாகக் கேட்டன. ஆந்தை தொடர்ந்து சொன்னது: ""அதனால் நான் அவசியம் கற்பிக்க வேண்டியது இந்தப் பறவைக்குத்தான். அறிவுடைய உங்களுக்கு நான் ஆசிரியராக இருப்பதைவிட, அறிவற்ற இந்தப் பறவைக்கு நான் சொல்லிக்கொடுப்பதுதான் மிகவும் அவசியம். ஆகவே, இந்தப் பறவைக்கு நான் ஆசிரியராக இருக்கிறேன். நீங்கள் போவதாக இருந்தால் போங்கள்!''
குற்றம் சாட்டப்பட்ட பறவையின் மீது நடவடிக்கை எடுக்காத ஆந்தையின் மீது மற்ற பறவைகள் கோபம்கொண்டன. அவை ஒன்றாகச் சேர்ந்து குருவுக்கு எதிராகக் குரலெழுப்பின: ""குருவே, இந்தப் பறவை இரண்டு முறை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் படிப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் எல்லோரும் இங்கிருந்து போகப்போகிறோம்!''
""நம் குரு சொன்னது சரிதான்! நாம்தான் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டோம்'' என்று பறவைகள் எல்லாம் உணர்ந்துகொண்டன. தவறு செய்த அந்தப் பறவையை ஒதுக்காமல் அன்புடன் பழகி திருத்த முயன்றன. ஆந்தையும் மிகவும் முயற்சியெடுத்து அந்தப் பறவைக்கு நல்ல விஷயங்களைக் கற்பித்தது. இறுதியில், அந்தப் பறவை திருந்தி எல்லோருடைய அன்பிற்குரிய பறவையாக மாறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.