வயல் ஓவியம்!
ஜப்பானியர்களின் கலை ஈடுபாடு பிரமிக்கத்தக்கது. காகித கலைப் பொருள்கள் (ஓரிகாமி) பச்சைத் தேநீர் விருந்துவரை அவர்களின் கலை ஈடுபாட்டை உணர முடியும். இப்போது, அவர்களின் கலை ஈடுபாட்டிற்கு இயற்கையையும் உடன்பட


ஜப்பானியர்களின் கலை ஈடுபாடு பிரமிக்கத்தக்கது. காகித கலைப் பொருள்கள் (ஓரிகாமி)
பச்சைத் தேநீர் விருந்துவரை அவர்களின் கலை ஈடுபாட்டை உணர முடியும்.
இப்போது, அவர்களின் கலை ஈடுபாட்டிற்கு
இயற்கையையும் உடன்பட வைத்திருக்கிறார்கள். எப்படித் தெரியுமா?
15, 000 சதுர மீட்டர் பரப்பளவில் நெல் பயிர் செய்திருக்கிறார்கள். பயிர் வளர்ந்த பின்பு பார்த்தபோது அது அழகான ஓவியமாக, நல்லெண்ண வாக்கியமாக உருமாறியிருந்ததுதான் அந்த ஆச்சர்யம். விதம் விதமான நெற்பயிர்களை குறிப்பிட்ட இடத்தில் பயிராக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.
1993 முதல் கவனம் செலுத்தப்பட்ட இந்த "கிராப் ஆர்ட்' இப்போது பெரும் பாராட்டைப் பெற்ற கலையாக
மாறியிருக்கிறது.தமிழில் இதை வயல் ஓவியம் என்று
அழைத்தால் பொருத்தமாக இருக்கும் இல்லையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...