
டிக்டிக் டிக்டிக்
கடிகாரம்
டிங்டாங் டிங்டாங்
மணி ஆடும்!
நேரம் சொல்லும்
கடிகாரம்
நில்லாதோடும்
தினந்தோறும்!
இருவர் துரத்தி
விளையாடும்
எண்கள் குறித்த
மைதானம்!
முள்ளில் காலம்
நடக்கிறது
முணுமுணுப்போடு
கடக்கிறது!
காலம் காட்டும்
கடிகாரம் - நம்
கடமை கூறும்
கடிகாரம்!
டிக்டிக் டிக்டிக்
கடிகாரம்
டிங்டாங் டிங்டாங்
மணி ஆடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.