சிறுகதை: ஒற்றை இறகுப் புறா!

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆற்றங்கரையில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது எல்லா மரங்ந்ளுக்கும் தாய் மரமாக விளங்கியது. நூற்றுக்கணக்கான பறவைக் குடும்பங்கள் அதில் வசித்து வந்தன. ÷அந்த மரத்தின் உச்சிக்
Updated on
2 min read

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆற்றங்கரையில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது எல்லா மரங்ந்ளுக்கும் தாய் மரமாக விளங்கியது. நூற்றுக்கணக்கான பறவைக் குடும்பங்கள் அதில் வசித்து வந்தன.

÷அந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு ஜோடி புறா கூடுகட்டி வசித்து வந்தது. ஒரு நாள் காலை பெண்புறா நான்கு அழகிய முட்டைகள் இட்டது. ஆண் புறாவும், பெண் புறாவும் மாறி மாறி முட்டைகளை அடைகாத்து வந்தன. மூன்று நாட்களுக்கு அப்புறம் முதல் குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. மறுபடி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவந்துக் கொண்டிருந்தது. ஆறாவது நாள் நான்காவது குஞ்சு வெளிவந்தது.

÷அந்தக் குஞ்சு சிறியதாகவும் நோஞ்சானாகவும் இருந்தது. தாய்ப்புறா அதை மிகவும் அக்கரையுடன் வளர்த்து வந்தது. குஞ்சுகள் வளர வளர அவைகளின் தேகம் முழுவதும் பஞ்சு போன்ற இறக்கைகள் முளைக்க ஆரம்பித்தன. மூன்று குஞ்சுகளும் இயற்கையான வளர்ச்சியுடன் இருக்க நான்காவது குஞ்சுக்கு ஒரு இறக்கை மட்டும் வளர்ந்திருந்தது.

÷தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் ""இந்தக் குஞ்சு எப்படி இரைதேடி வாழப் போகிறதோ!'' என்று கவலைப்பட்டன.     

÷மற்ற மூன்று குஞ்சுகளும் பறக்கத் தொடங்கவே, நான்காவது குஞ்சு மரக்கிளையில் உட்கார்ந்துக் கொண்டு, அவைகள் பறப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவைகள் பறந்து சென்று விட்டு, மாலை கூடு திரும்பியதும், தங்கள் தாயிடம் தங்கள் பார்த்ததையும், கேட்டதையும் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டன.

÷அன்றிரவு நான்காவது குஞ்சு தன் தாயிடம், ""அம்மா! நான் எங்கும் பறக்க முடியாமல் ஒற்றை இறக்கையுடன் பிறந்துக் கஷ்டப்படுகிறேனே! இதற்கு வழி எதுவும் இல்லையா?'' என்று கேட்டது.

÷""நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் கடவுள் கையிலிருக்கிறது. அவர் மனது வைத்தால் உன் கஷ்டம் நீங்கும். நீ தினசரி கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்'' என்றது.

÷அந்தப் பறவை தன் தாய் கூறியதைப் போல தினசரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு வந்தது. அதனது சொந்த சகோதர, சகோதரி பறவைகள், மற்ற பறவைகளுடன் சேர்ந்து இதை, "ஒற்றை இறக்கை' என்று கேலி செய்தன. அதைக் கேட்டு அது வருத்தப்பட்டது.  

÷ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒற்றை இறக்கை பறவை மட்டும் கூட்டில் தூங்காமல் விழித்துக் கொண்டு கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. கூட்டின் கதவு மெதுவாக தட்டப்படும் சப்தம் கேட்டது. பறவை கதவை திறந்தது. கூட்டின் வெளியே தன்னைப் போல வேறொரு ஒற்றை இறக்கை பறவை முழுவதும் நனைந்து கொண்டு நின்றுக் கொண்டு இருந்தது.

÷""மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறாயே... உள்ளே வா!'' என்று அந்தப் பறவை அழைத்தது.

÷உள்ளே வந்ததும், ""உனக்கு ஒற்றை இறக்கை எப்படி ஏற்பட்டது'' என்று கேட்டது.

÷""ஆம்! நான் கூட பிறக்கும் போதே ஒற்றை இறக்கையுடன் தான் பிறந்தேன். என் குடும்பத்தில் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஒரு சமயம் நான் அவர்களுக்குப் பாரமாக இருக்கிறேன் என்று விரட்டி விட்டார்கள்.''

÷ ""உனக்கு உபயோகமில்லாத ஒரு இறக்கையை எனக்குக் கொடுத்தால் எனக்காவது உபயோகமாயிருக்குமே! என்று உன்னிடம் கேட்கவே வந்தேன். ஒரு மந்திரவாதி இன்னொரு இறக்கை இருந்தால், அதை என் தோளில் ஒட்டி என்னை பறக்க வைப்பதாகக் கூறியிருக்கிறான்'' என்றது புதிதாக வந்த பறவை.

÷""நான் உனக்கு என் ஒற்றை இறக்கையைக் கொடுக்கிறேன். அந்த ஒரு இறக்கை இருந்து எனக்கு எதற்குப் பயன்படப் போகிறது? உனக்காவது பிரயோஜனப்படட்டுமே! அதனால் எனக்கு சந்தோஷமே!'' என்றது அந்த ஒற்றை இறக்கைப் பறவை.

÷இதைக் கேட்டதும் புதிதாக வந்த ஒற்றை இறக்கைப் பறவை வெள்ளி சிறகுகளுடன் ஒரு தேவதையாக மாறி, ""நீ மிகவும் தயாள குணமுள்ள பறவை. உன்னைப் பரிசோதிக்கவே கடவுள் என்னை அனுப்பி வைத்தார். அந்த சோதனையில் நீ ஜெயித்து விட்டாய்'' என்று அந்த தேவதை புன்சிரிப்புடன் கூறிக் கொண்டே, இறக்கை இல்லாத தோள் பக்கம் அந்தப் பறவையைத் தொட்டது. உடனே அந்த இடத்தில் அழகிய இறக்கை என்று தோன்றியது.

÷""இப்போதிருந்து நீயும் உன் சகோதர, சகோதரிகளைப் போல பறக்கலாம்'' என்று கூறிவிட்டு அந்த தேவதை மறைந்து விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com