நாடுகளறிவோம்: கிரேக்கம்

கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத்தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோன
Published on
Updated on
2 min read

கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத்தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

கிரேக்கம், மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் பிறப்பிடம். இதன் தலை நகரம் ஏதென்ஸ். இந்த நாட்டின் ஆட்சி மொழி கிரேக்க மொழி.  "நாடாளுமன்ற குடியரசு முறை அரசியல் அமைப்பு'தான் இங்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக "காரொலோஸ் பப்பூலியாஸ்' என்பவரும், பிரதமராக "ஜார்ஜ் பாபன்டிரியோ' என்பவரும் பதவியில் உள்ளனர்.

கிரேக்க நாடு 1,31,990 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைக் கொண்டது. இந்த நாட்டில் 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11,306,183 பேர் வாழ்கிறார்கள்.

இங்குள்ள "பார்த்தினன்' என்பது மிகப் பழமையான, பேரழகான கட்டடமாகும். இது 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் "கன்னி ஆதெனா'. இந்தத் தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இது, ஏதென்ஸ் நகரின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது. பார்த்தினன் கட்டடம், கிரேக்க நாட்டின் மாபெரும் அரசியல்வாதி பெர்க்கிளிஸின் காலமான கி.மு. 438-இல் கட்டப்பட்டது.

கி.பி.1821-ஆம் ஆண்டு, மார்ச் 25-ஆம் தேதி கிரேக்க நாடு, துருக்கிய பல்மத அரசான ஆட்டோமன் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக்கொண்டது.

கிரேக்க நாட்டின் தேசிய விலங்கு டால்பின் மீன். பீனிக்ஸ் பறவையின் உருவமானது     கிரேக்க நாட்டில் மிக முக்கியமாக மதிக்கப்படுகிறது. சில கிரேக்க நாணயங்களில் இந்தப்  பறவையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் நவீன கோடைகால ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத் தலைநகர் ஏதென்சில்தான் தொடங்கியது. இப்போட்டி கி.பி. 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ஆம் தேதிவரை "பனாதினைக்கோ' மைதானத்தில் நடைபெற்றது.

மாபெரும் தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ், அவரது மாணவர் பிளாட்டோ ஆகியோர்    கிரேக்க நாட்டவர்கள். சாக்ரடீஸின் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பிளாட்டோ எழுதிய "குடியரசு',"அரசியல்' ஆகிய நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.

கோதுமை, ஆலிவ், முள்ளங்கி, பீன்ஸ் ஆகியவை இந்த நாட்டின் முக்கிய           விளைபொருட்கள். முக்கியத் தொழில் மீன்பிடித் தொழில். "மெüசாக்கா' என்பது        கிரேக்கத்தின் பாரம்பரிய உணவு. இது, உருளைக்கிழங்கு, தக்காளிச் சாறு, மாட்டிறைச்சி ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. "செüலகி' என்பதும் புகழ்பெற்ற உணவுதான். இது, மாடு அல்லது கோழி இறைச்சி, மீன், எலுமிச்சைகொண்டு தயாரிக்கப்படுகிறது. பூண்டு சேர்த்த ரொட்டி, பாலாடைக்கட்டி, ஆலிவ் சேர்த்த காய்கறிக்கூட்டு போன்றவையும் விரும்பி உண்ணப்படுகின்றன.

கிரேக்கப் பெண்களின் பாரம்பரிய ஆடை "கரகெüனா'. வரிசையாகத் தங்க நாணயங்கள் பொருத்தப்பட்ட இந்த ஆடையினை திருமணப்பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.   ஆண்களின் உடைகள் "பெüச்டநெள்ள', "சோலிஸ்' போன்றவை.

புத்தாண்டு, கிறிஸ்துமஸ்,மே தினம், ஜூலை இசைவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

ய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com