வீட்டுநூலகம்

எனக்கு அன்று நான்கு வயது இருக்கும். திடீரென்று ஒரு வாசனை வந்தது. இந்த வாசனை எங்கிருந்து வருகிறது? அப்பா திறந்த அலமாரியிலிருந்து வருகிறது. ÷அலமாரியில் என்ன இருக்கிறது? ÷அலமாரியின் தட்டுகளிலெல்லாம் எவைய
வீட்டுநூலகம்

எனக்கு அன்று நான்கு வயது இருக்கும். திடீரென்று ஒரு வாசனை வந்தது. இந்த வாசனை எங்கிருந்து வருகிறது? அப்பா திறந்த அலமாரியிலிருந்து வருகிறது.

÷அலமாரியில் என்ன இருக்கிறது?

÷அலமாரியின் தட்டுகளிலெல்லாம் எவையோ அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன!

÷""அது என்ன அப்பா?'' ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் கேட்டேன்.

÷""பொக்கிஷம் மகனே'' அப்பா சொன்னார்.

÷அது என்ன பொக்கிஷம்? அப்பா அடுக்கி வைத்திருக்கிற பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன். ஆகமொத்தம் ஒரு சுவாரஸ்யம். பிறகு அது ஒரு வழக்கமானது.

÷அப்பா, அலமாரியைத் திறப்பதைக் கண்டால் நான் அருகே ஓடிச் செல்வேன்.  அதிலிருந்து ஒரு பொருளையெடுத்து அப்பா என் கையில் கொடுத்தார். அதன் பெயர் "புத்தகம்' என்று சொன்னார்.

÷புத்தகம்! நல்ல சித்திரமுள்ள மேலட்டை. உள்ளே சித்திரங்கள் உள்ள காகிதங்கள். அப்பா பக்கத்திலிருந்த கட்டிலில் என்னை அமர்த்தினார். அப்பாவும் பக்கத்தில் அமர்ந்தார். புத்தகம் எனும் அற்புதப் பிரபஞ்சத்தை நோக்கி முதன்முதலாக என் கவனத்தை ஈர்த்தார்.

÷அது ஒரு கதைப் புத்தகம். புத்தகம், கதை, சித்திரம், நிறம் ஆகிய நான்கு அற்புதங்களை நான் ஒன்றாகக் கிரகிக்கிற நாளாக இருந்தது அந்த நாள்.

÷ஒரு கதையிலேயே நிறையப் படங்கள். முதலாவது ஒரு நரியின் சித்திரம். இரண்டாவது சித்திரத்தில், நரியின் தலையைச் சுற்றிலும் நிறைய ஈக்கள் பறக்கின்றன. அடுத்த சித்திரத்தில், நரி ஒரு செடியைக் கடித்துப் பற்றிக்கொண்டு தண்ணீரில் இறங்குகிறது. நரி தண்ணீரில் அமிழ்ந்து செடியை மட்டும் வெளியே காட்டுகிறது. ஈக்கள் எல்லாம் செடிக்கு வந்துவிட்டன. நரி, செடியை தண்ணீரிலேயே விட்டுவிட்டு, நீருக்கடியில் நீந்தி மறு கரையை அடைகிறது. இப்படி அது ஈக்களிடமிருந்து தப்பிக்கிறது.

÷இப்போதும், இக்காட்சிகளை என் மனக் கண்ணில் தெளிவாகக் காண முடிகிறது. ÷இந்த நரிதான் என் வாழ்க்கைக்குள் நுழைந்த முதலாவது வீரன். வீரத்தைப் போற்றுவது என்பது மனிதர்களின் இயல்பு. நான்தான் அந்த நரி. மற்ற பிள்ளைகள்தான் ஈக்கள். அந்த நரியைப் போல அறிவைப் பயன்படுத்தி, மற்றவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்.

இதுதான் அன்று  அந்தக் கதையிலிருந்து நான் படித்த பாடம். ÷வெகு காலம் கழித்து நான் துறவு பூண்டேன். தலையை மொட்டையடித்துக் கொண்டு ஒரு குளத்திலிறங்கி மூழ்கிக் கரையேறினேன். அப்போது, என் குரு எனக்கு புதிய பெயர் சூட்டி, துறவிக்கான உடைகளைக் கொடுத்தார். அந்த சந்தர்ப்பத்தில் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நான் சரியாக அந்தக் கதையில் வந்த நரியைப் போலவே ஆகியிருக்கிறேன்.

÷உறவுகள் எனும் ஈக்களை தண்ணீரில் விட்டுவிட்டு மறுகரையடைந்திருக்கிறேன்.

÷அப்பாவின் அலமாரியிலிருந்த பொன்னும் பொருளும் மட்டுமல்ல, பொக்கிஷங்கள். அதிலிருந்த புத்தகங்களெல்லாம் பொக்கிஷங்கள்தான். அதையெல்லாம் புரிந்துகொள்வதற்கு பத்துப் பதினைந்து வருடங்கள் தேவைப்பட்டன.

÷கவிதைகள், கதைகள், நாவல்கள், நாடகங்கள், உரைகள், அறிவியல் பாடங்கள், ஓ! மனிதனின் படைப்புத் திறன் எத்தனை எத்தனை துறைகளில் வளர்கிறது!

÷அவையெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற புத்தகங்களை அப்பா ஏன் இப்படி அடுக்கி வைத்துப் பாதுகாக்கிறார்? அதை உற்று அறிவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அப்பா எப்போதும் சொல்வார்: ""மை புக்ஸ் ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்''( என் புத்தகங்கள் என் நல்ல நண்பர்கள்).

÷அப்பாவின் புத்தக ஆசை என்னையும் பாதித்தது. அலமாரியிலிருந்து வந்த வாசனை என்னை ஈர்த்ததுபோல, அப்பாவின் அறிவுத் தேடலும் என்னிடம் வந்திருக்க வேண்டும். புத்தகங்கள் வாங்கி அடுக்கி வைக்க வேண்டும் என்று நான் பேராவல் கொண்டேன்.

÷அதனால், தேர்ச்சி பெற்று நான் மேல் வகுப்பிற்குச் சென்றாலும், முந்தைய வகுப்பில் நான் படித்த புத்தகங்களை பாதுகாத்து வைத்திருந்தேன். வீடென்றால், ஒரு வீட்டு நூலகம் வேண்டும் என்று உறுதியாக நினைத்தேன். என் நண்பர்களையும் வீட்டில் நூலகம் அமைக்கும்படி தூண்டிக் கொண்டிருந்தேன்.

÷வீட்டில் ஒரு நூலகம் தொடங்குவது என்பது சுலபமானது. புத்தகங்களுக்கு மற்ற புத்தகங்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி உண்டு. கையில் கிடைக்கின்ற புத்தகங்களையெல்லாம் கொண்டுவந்து ஒன்றோடொன்று சேர்த்து வைக்கவேண்டும். ஐந்து புத்தகங்கள்தான் இருக்கின்றன என்றாலும், அதை ஒரு நூலகமாக நினைக்க வேண்டும். அப்போது, நமக்கு புத்தகங்களின் மீது ஒரு தனிப்பட்ட மரியாதை ஏற்படும்.

÷முதலில், புத்தகங்களை வெளியே இரவல் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமான நண்பனாக இருந்தாலும், புத்தகங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து வாசித்துவிட்டு, இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுச் செல்லும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.

÷புத்தகங்களின் எண்ணிக்கை மாயமந்திரம்போல அதிகரிக்கும். புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்போது, மற்றவர்களுக்கும் நம்மை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தோன்றும். நமக்கும், புதிதாகத் தென்படுகிற புத்தகத்தை கையிலெடுத்துப் பார்க்க ஆசை ஏற்படும். வாசிக்க வேண்டுமென்று ஆர்வம் பெருகும்.

÷மனதிற்குப் பிடித்த புத்தகத்தை சொந்தமாக்க முடியவில்லையென்றால், அதன் பெயரையும், ஆசிரியரின் பெயரையும், அதை வெளியிட்ட பதிப்பகத்தின் முகவரியையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைக்க வேண்டும். ஒரு நாள் அந்தப் புத்தகத்தை நாம் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஒரு அதிசயம் போல, அந்தப் புத்தகம் நம்மைத் தேடி வரும்.

÷புத்தகங்களை தொடக்கத்திலிருந்தே வகை பிரித்து வைப்பது, எளிதாக புத்தகங்களை கையாள்வதற்கும், நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் உதவி செய்யும். வகை பிரித்து வைப்பது, புத்தகங்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறது.

÷"கார்டு இன்டெக்ஸ்' தயாரிப்பதும் இப்போது நூலக அறிவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது. உங்களுக்கருகே நல்ல நூலகர் யாராவது இருக்கிறார்களா? பெற்றோர்களிடம் விசாரித்துப் பாருங்கள். அப்படி இருந்தால், அவரிடம் சென்று கேட்டுப் பாருங்கள். அவர், எப்படி புத்தகங்களை வகை பிரிப்பது என்றும், எப்படி கார்டு இன்டெக்ஸ் தயாரிப்பது என்றும் உங்களுக்குச் சொல்லித் தருவார்.

÷புத்தகங்கள் கவிதைகளாக இருக்கலாம். வாழ்க்கை வரலாறுகளாக இருக்கலாம். கதைகளாக இருக்கலாம். நாவல்களாக இருக்கலாம். பயணக் குறிப்புகளாக இருக்கலாம். அறிவியல் விஷயங்களாக இருக்கலாம். புத்தகங்கள் எத்துறை சார்ந்தவையாக இருக்கின்றனவோ, அத்துறைகளை முதலில் எழுதி வையுங்கள். பிறகு, அத்துறைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அலமாரித் தட்டுகளில் புத்தகங்களை வரிசைப்படுத்துங்கள்.

÷புத்தகங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் இருந்தால், ஒவ்வொரு மொழிக்கும் வேறு வேறு இடம் கொடுக்கவேண்டும்.

÷ஒரு மொழியில், ஒரு துறை தொடர்பாக என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று, அவற்றை எழுதியவர் பெயரின் எழுத்து வரிசைப்படி அடுக்கி வைத்தால், திடீரென்று தேவைப்படும் போது எடுப்பதில் சிரமம் இருக்காது.÷ஐநூறுக்கும் அதிகமாக புத்தகங்கள் சேர்ந்துவிட்டால், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். புத்தகங்கள் சார்ந்திருக்கின்ற துறைகள் அடிப்படையிலும், ஆசிரியர்களின் பெயர் எழுத்து வரிசைப்படியும் இரண்டு பதிவேடுகள் வைத்துக்கொள்ள வேண்டும்.

எல்லா புத்தகங்களையும் இரண்டு பதிவேடுகளிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். அப்போது, இன்டெக்ஸிற்கு வசதியான ஒரு எண்ணை புத்தகத்திற்குக் கொடுக்கலாம். அதை ஒரு நல்ல நூலகரின் உதவியுடன் கொடுப்பதுதான் நல்லது.

÷ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு மனதின் கண்ணாடியாகும்.

பெரிய உண்மைகளும் அவற்றில் இருக்கும். நல்ல புத்தகங்களும் இருக்கும். கெட்ட புத்தகங்களும் இருக்கும். நாம்  நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரிய புத்தகங்களைப் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் நம் ஆசிரியர்கள் நமக்கு உதவுவார்கள். பெற்றோர்கள் உதவுவார்கள்.

÷சிறிது காலத்திற்குப் பிறகு நம் புத்தக அலமாரிக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், நம் மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்களும் வந்துவிடுவார்கள். அவர்களெல்லாம் என்றென்றும் நம் சிந்தனைக்கு வளம் சேர்ப்பவர்களாக, இந்த வாழ்க்கையைக் கற்றுத் தருபவர்களாக நம்முடன் தங்கிவிடுவார்கள்.

÷ஒரு நண்பர் குழுவுடன் இருக்கும்போது, ஒவ்வொருவரிடமும் பேசவேண்டும் என்று நமக்குத் தோன்றும். அவர்களிடம் உரையாடுவதால் மகிழ்ச்சி ஏற்படும். எல்லோரிடமும் ஒரே நேரத்தில் பேச முடியாது அல்லவா? அதனால், ஒவ்வொருவரிடமும் மாறி மாறிப் பேசுவோம்.

அதுபோன்று, நாம் நம் புத்தகங்களுக்கிடையே இருக்கும்போது, ஒவ்வொரு நூலாசிரியரும் நம் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதுபோல நமக்குத் தோன்றும். நாம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசவேண்டும். அதாவது, ஒவ்வொரு நூலையும் ஆழ்ந்த முறையில் கற்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com