ஜூலை மாதம்: காலம்

இம்மாதம் வருடத்தின் ஏழாவது மாதம் ஆகும். முப்பத்தோரு நாட்களைக் கொண்டது. ரோமானியர்கள் இதற்கு "க்வின் டிலிஸ்' என்று பெயர் வைத்தார்கள். ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவாக ஜூலை என்று பெயரிட்ட
ஜூலை மாதம்: காலம்
Updated on
1 min read

இம்மாதம் வருடத்தின் ஏழாவது மாதம் ஆகும். முப்பத்தோரு நாட்களைக் கொண்டது. ரோமானியர்கள் இதற்கு "க்வின் டிலிஸ்' என்று பெயர் வைத்தார்கள். ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவாக ஜூலை என்று பெயரிட்டார்கள்.

புகழ்பெற்ற ஜூலியஸ் சீசர் பிறந்ததும் இம்மாதத்தில்தான். அவர் கி.மு.102-ஆம் வருடம் ஜூலை பன்னிரண்டாம் தேதியன்று பிறந்தார்.

ஆங்கிலேயர்கள் ஜூலை 15-ஆம் தேதியை செயின்ட் ஸ்வைதின்ஸ் நாளாகக் கொண்டாடுகிறார்கள். அந்நாளில் ஜூலை மாதம் நிலையற்ற வானிலையைக் கொண்டதாக இருந்தது. ஜூலை முதல் தேதி மழை பொழிந்தால் மாதம் முழுவதும் மழை பெய்யும், அந்த தேதியில் வானம் தெளிவாகக் காணப்பட்டால், மாதம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கருதினார்கள். அந்தப் பருவத்தில் ஒரு சிறிய மேகம் கதிரவனைச் சிறிது நேரம் மறைத்தால் கூட அது இதமான சூழலைத் தரவல்லது என்று நம்பினார்கள்.

"செயின்ட் ஸ்வைதின்ஸ் நாளில் மழை பெய்தால்

அது நாற்பது நாள்கள் நீடிக்கும்.

செயின்ட் ஸ்வைதின்ஸ் நாளில் வெயில் அடித்தால் அதுவும் நாற்பது நாள்கள் நீடிக்கும்...'

- என்று ஒரு பாடலே இதற்கு இருக்கிறது. அந்த நாளில் மழை பெய்தால் அதை ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே கருதினார்கள்.

இங்கிலாந்தின் லிவர்புலில் இருக்கும் மான் தீவில் இருக்கும் தைன்வால்டு மலையில், ஜூலை 5-ஆம் தேதியன்று தைன்வால்டு விழா கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமிக்க இந்த விழாவில் பாராளுமன்றத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள். அந்த வருடத்தின் பாராளுமன்றச் சட்டங்களையும் அறிக்கைகளையும் முதலில் ஆங்கிலத்திலும் பிறகு "மான்க்ஸ்' மொழியிலும் உரக்க வாசிப்பார் தலைமை நீதிபதி. இந்தப் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் அந்தத் தீவை ஆண்ட வைக்கிங் மன்னர்களால் கொண்டுவரப்பட்டது. காலங்கள் மாறினாலும் காலப்போக்கில் இந்த விழா மாறாமல் பின்பற்றப்படுகிறது.

ஜூலை மாதத்தில் வரும் மற்றொரு முக்கியமான தினம் அமெரிக்காவின் சுதந்திர தினமாகும். 1775-ஆம் வருடம் ஜூலை 4-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச நாடுகளில் வல்லரசாக விளங்கும் அமெரிக்கா, சுதந்திரம் அடைந்து 236 ஆண்டுகள் ஆகிவிட்டது!

பிரான்ஸ் நாட்டில் ஜூலை 14-ஆம் தேதியை "பேசிலி தினமாக'க் கொண்டாடுகிறார்கள். பொதுவிடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இந்நாளில்தான் அந்நாட்டில் கொடூர தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட சிறைக்கோட்டை தகர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com