பூமியின் வடிவத்தைக் கண்டுபிடித்தது எப்படி?

உள்நாட்டுக் கடல்களிலோ, கடற்கரையோரம் சார்ந்த நீர்ப்பகுதிகளிலோ பயணம் செய்கின்றபோது பூமியின் வடிவம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி மாலுமிகள் கவலைப்படவில்லை. ஆனால் தங்களது கரைகளைவிட்டு வெகு தொலைவிற்குக் கப
பூமியின் வடிவத்தைக் கண்டுபிடித்தது எப்படி?
Updated on
2 min read

உள்நாட்டுக் கடல்களிலோ, கடற்கரையோரம் சார்ந்த நீர்ப்பகுதிகளிலோ பயணம் செய்கின்றபோது பூமியின் வடிவம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி மாலுமிகள் கவலைப்படவில்லை. ஆனால் தங்களது கரைகளைவிட்டு வெகு தொலைவிற்குக் கப்பலில் செல்லும்போது, பூமியின் மேற்பரப்பின் வடிவத்தைக் கவனத்தில் கொள்ளாமல் வரையப்பட்ட பழைய தேசப்படங்களில் காணப்பட்ட அநேகத் தவறுகளை மாலுமிகள் சரி செய்ய வேண்டி இருந்தது.

மாபெரும் புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய காலமாக பதினைந்தாம் நூற்றாண்டு விளங்கியது. பயணம் புறப்பட்ட கப்பல்கள் கடற்கரை ஓரங்களை ஒட்டிச் செல்ல ஒருபோதும் நேரவில்லை. பெருங்கடல்களைத் தாண்டிப் புறப்பட்டன. இத்தகைய பயணங்களுக்கு வியக்கத்தக்க துணிச்சல் தேவைப்பட்டது. அது ஏன் என்பதை விரைவில் நீங்கள் காண்பீர்கள்.

இன்றைய நாளில் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவனாக இருந்தாலும், பூமியில் எந்த இடத்தையும், அட்சரேகை, தீர்க்கரேகை சந்திப்பதைக் கொண்டு காட்ட முடியும். அட்சரேகை என்பது நில நடுக்கோட்டிலிருந்து உள்ள தூரத்தைக் காட்டும் வட்டச் சுற்று அளவில் கணக்கிடப்படுகிறது. நிலநடுக்கோட்டிலிருந்து தெற்கே அல்லது வடக்கே 0 டிகிரியிலிருந்து 90 டிகிரி வரை என்று கணக்கிடப்படுவது.

அட்சரேகையை இரவு நேரத்தில் வானில் காணப்படும் துருவ நட்சத்திரத்தின் உயரத்தைக் கொண்டு கணக்கிடலாம். நீண்ட காலமாகவே இதற்கென மாலுமிகள் விசேஷக் கருவிகளை வைத்திருக்கிறார்கள். அவை கோணமானி அல்லது கப்பலோட்டியின் கோணமானி, முற்கால உயர்வு மானி என்று அழைக்கப்படுகின்றன. கடலில் கப்பல் தளத்தினின்றும் விண் கோளங்களை அளப்பதற்கு அவை உதவி புரிகின்றன.

தீர்க்கரேகை என்பது சற்று ஏய்க்கும் பாங்குடையது. தீர்க்கரேகை என்பது நாமிருக்கும் தீர்க்கக் கோட்டின் தளத்திற்கும், பூஜ்ய தீர்க்கக்கோட்டின் தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும்.

பூஜ்ய தீர்க்கக்கோடு பூமியை மேற்கு, கிழக்குப் பாதிகளாகப் பிரிக்கிறது. அதே வேளை நிலநடுக்கோடு பூமியை இரண்டு பாதியாக, ஒவ்வொன்றையும் 180 டிகிரி ஆகப் பிரிக்கிறது. இம்மாதிரியாக தீர்க்கக் கோடுகள் 0 டிகிரி முதல் 180 டிகிரி வரை செல்கின்றன. கிழக்கேயுள்ளவை கிழக்கு தீர்க்க ரேகைகள் எனவும் மேற்கேயுள்ளவை மேற்குத் தீர்க்கரேகைகள் என்றும் வழங்கப்படுகின்றன.

திறந்த கடல் வெளியில் தீர்க்க ரேகையை எப்படிக் கண்டறிய முடியும்? இதற்கு விடை கண்டுபிடிப்பதற்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. ஆகவே, ஆரம்ப நாளைய கடலோடிகளால் அட்சரேகையால் மட்டுமே தங்களது நிலையை உறுதியாகச் சொல்ல முடிந்தது.

தங்களுடைய வழித்தடத்தை மாலுமிகள் எப்படித் தீர்மானித்தார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்று.

போர்ச்சுகலிலிருந்து தென் மேற்காக, பெருங் கடலைக் கடந்து ஏதேனும் ஒரு தீவுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சேருமிடத்தின் துறைமுகம் உள்ள அட்சக்கோட்டில் சூரியன் நடுப்பகலில் உள்ள உயரத்தைக் கேப்டன் கண்டறிந்தார். நடுப்பகலில் சூரியன் சரியாக உச்சியில் தெரியுமாறு தெற்கு நோக்கிக் கப்பலைச் செலுத்தினார். பிறகு கப்பல் சரியாக 90 டிகிரி மேற்காகத் திரும்பி, அந்தத் துறைமுகம் போய்ச் சேருகின்றவரை அதே அட்சக் கோட்டில் கப்பலைச் செலுத்துமாறு உத்தரவிட்டார். பகலில் சூரியன் உச்சியில் இருக்கும் உயரத்தைச் சோதித்து அவர் செல்லும் அட்சக்கோடு சரிதானா என்பதை உறுதி செய்துகொண்டு தொடர்வார்கள்.

உருண்டை வடிவமான உலகத்தை ஒற்றைப் பரிமாண, தட்டை வடிவமான பரப்பாக, தேச வரைபடமாக மாற்றுவது என்பது மற்றுமொரு பிரச்னை. தட்டையான காகிதத்தின் மீது துல்லியமான தேசப்படத்தை உங்களால் எப்படி வரைய முடியும்?

வளைந்த பரப்பைக் காட்டுவதற்காக எல்லா வகையான வழிமுறைகளிலும் மக்கள் முயன்று பார்த்தார்கள்.

வளைந்த பரப்பைத் தட்டையானதாக மாற்றிக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல. ஆகவே தேசப்படம் தயாரிப்பவர்கள் பல வழிகளையும் சிந்தித்தனர். அதுவே பின்னர் ஒரு விஞ்ஞானமாக மாறியது. இந்த விஞ்ஞானத்தின் பெயர் கார்டோகிராஃபி.

-தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com