அன்றாட வாழ்வில் அறிவியல்: கலங்கரை விளக்கம் கப்பலுக்கு எப்படி உதவுகிறது?

சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய கலங்கரை விளக்கத்தைப் (கஐஎஏப ஏஞமநஉ) பார்த்திருக்கலாம். விரைவில் அங்கே கடற்பயண வரலாறு பற்றிய அருங்காட்சியகம் ஒன்று அமையப்போகிறது. இரவு
அன்றாட வாழ்வில் அறிவியல்: கலங்கரை விளக்கம் கப்பலுக்கு எப்படி உதவுகிறது?
Published on
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய கலங்கரை விளக்கத்தைப் (கஐஎஏப ஏஞமநஉ) பார்த்திருக்கலாம். விரைவில் அங்கே கடற்பயண வரலாறு பற்றிய அருங்காட்சியகம் ஒன்று அமையப்போகிறது. இரவு நேரத்தில் அந்தக் கலங்கரை விளக்கம் கடலை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். எதற்கு இந்தக் கலங்கரை விளக்கம்? இது எதற்குப் பயன்படுகிறது?

துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு, கரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? கடற்கரைக்கு அருகில் ஆபத்தை விளைவிக்கும் பாறைகள் மணல் மேடுகள்போன்றவை எதுவும் இருக்கின்றனவா? என்பதுபோன்ற விவரங்களை முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதற்காகவே வெகுகாலமாக கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இல்லையென்றால் பிரம்மாண்டமான கப்பல்கள் தரைதட்டி நின்றுவிடும் ஆபத்து உள்ளது. பிறகு அவற்றைச் சீரமைத்து மீண்டும் கடலுக்குள் செலுத்துவது மிகப் பெரிய பிரச்னையாகிவிடும்.

நிலப் பகுதியிலிருந்து கப்பல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை மாலுமிகளுக்கு உணர்த்தவே கலங்கரை விளக்கம் உதவுகிறது. இந்தக் கலங்கரை விளக்கங்களிலிருந்து பாய்ச்சப்படும் ஒளி மிகப் பிரகாசமானது. கடலில் பயணம் செய்யும் மாலுமிகளால் இந்த ஒளியைப் பார்க்க முடியும். கலங்கரை விளக்கங்களில் ஒளியை உண்டாக்க மான்ட்டில் விளக்கோ (பெட்ரோமாக்ஸ் விளக்கில் பயன்படுத்தப்படுவது), அசிட்டிலின் வாயு நிரப்பப்பட்ட மின் இழை விளக்குகளோ பயன்படுத்தப்படுகின்றன.

கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கு நேராக ஒளியைப் பாய்ச்சாமல், கடலை நோக்கி ஒளியைப்    பாய்ச்சியவாறு அரை வட்டத்தில் சுழலும். இரவில் நேரில் சென்றால் இதைத் தெளிவாகப் பார்க்கலாம். சில விளக்குகள் ஒளியை விட்டு விட்டு அனுப்புவதாகவும் இருக்கும். விளக்குச் சுழற்சி வேகமும், ஒளிகளுக்கு இடையிலான கால இடைவெளியும் ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் மாறுபட்டிருக்கும். மாலுமிகள், இந்த மாறுபாடுகளை வைத்து ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

வானிலை மோசமாக உள்ள நேரங்களிலும் செயல்படும் வகையில் நவீன கால கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய நவீன கலங்கரை விளக்கங்களில் ரேடியோ அலை பரப்பிகளைக்கொண்டு மாலுமிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது தவிர திசை அறிய மாலுமிகளுக்கு, ஜி. பி. எஸ். திசை காட்டியும், கடல் வரை படங்களும், வான் நட்சத்திர வரைபடங்களும் உதவுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com