

கால்குலேட்டர் இருந்தால் யார்வேண்டுமானாலும் சுலபமாக கணக்குச் செய்யலாம்.
முற்காலத்தில் சுலபமாகக் கணக்குச் செய்வதற்கான வழிமுறைகளைப் பலரும் ஆராய்ந்து வந்தார்கள். மணிகள் இணைத்துத் தயார் செய்த "அபாக்கஸ்' எனும் கருவியைக்கொண்டு சீனர்களும் கிரேக்கர்களும் கூட்டவும் கழிக்கவும் அறிந்திருந்தனர்.
17 - ஆம் நூற்றாண்டில் ஜப்பானியர்கள்தான் இந்த அபாகஸ் கருவியை இன்னும் மேம்படுத்தினார்கள். 1623 - ஆம் ஆண்டில் "வில்லியம் ஷிக்கார்ட்' என்பவர் "மெக்கானிக்கல் கால்குலேட்டர்' என்ற கருவியை உருவாக்கினார். இது அவ்வளவு புகழ் பெறவில்லை. 1642 - ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரரான "பாஸ்கல்' இப்போது உள்ளதைப்போன்ற கால்குலேட்டரின் முதலாவது வடிவத்தைக் கண்டுபிடித்தார். 1885 - ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த "வில்லியம் சிவார்ட்பரோ' என்பவர் இந்தக் கால்குலேட்டரில் நிறைய மாற்றங்களைச் செய்தார். கூட்டவும் கழிக்கவும் பெருக்கவும் வகுக்கவும் மட்டுமல்ல, பலவிதமான சிக்கலான கணக்குகளை உடனடியாகச் செய்துமுடித்துவிடக்கூடிய கால்குலேட்டர்கள் இப்போது கிடைக்கின்றன.
சில குறிப்பிட்ட தூண்டுதலுக்கு ஆட்படும்போது தாமரை இதழ்களில் உள்ள செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களைத் தாமரையில் மட்டும் அல்ல, வேறு பல செடிகளிலும் பார்க்கலாம். இந்தத் தூண்டல்கள் அதற்குள்ளிருந்தே ஏற்படலாம். அல்லது வெளியிலிருந்து ஏற்படலாம். தாமரையைப் பொறுத்தவரை இந்தத் தூண்டல் வெளியிலிருந்து ஏற்படுகிறது. இங்கே சூரிய ஒளிதான் தூண்டலை ஏற்படுத்துகிறது. சூரியன் உதிக்கும் நேரத்திற்கும் மறையும் நேரத்திற்கும் இசைந்து நடை பெறுகின்ற இத்தகைய மாற்றங்களுக்கு சவஇபஐசஅநபவ என்று பெயர்.
சூரிய ஒளி படும்போதுதான் தாமரை மலர்கிறது அல்லவா? சூரிய ஒளி இல்லாமல் போகும்போது அது கூம்புகிறது. அப்படியென்றால் தாமரை மலரும்படியும், கூம்பும்படியும் தூண்டுவது சூரியன்தான் என்பது தெளிவாகிறது. இப்படி ஒளியின் தூண்டுதலால் ஏற்படும் மாற்றங்களை போட்டோநாஸ்டிக் (டஏஞபஞசஅநபஐஇ) மாற்றங்கள் என்று சொல்கிறார்கள்.
தாமரை மலரின் மீது சூரிய ஒளி படும்போது, தாமரையின் இதழ்களின் உள்ளே உள்ள செல் அடுக்குகள் விரிவடைகின்றன. இதன் பயனாக பூவிதழின் வளைவு அதிகரிக்கிறது. பூ மலர்கிறது.
மாலையாகும்போது செல் அடுக்குகள் மீண்டும் விரிவடைகின்றன. ஆனால் இந்த முறை, முன்பு விரிவடைந்ததின் எதிர் திசையில்தான் விரிவடைகின்றன. காரணம் இந்த விரிவடைதல் மூலமாக சுற்றிலுமுள்ள செல்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக இதழ்களின் வளைவு அதிகரிக்கிறது. மலர் கூம்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.