

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி செயல்படுகின்ற நிறையக் கருவிகளை நாம் இன்று தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இங்கே அத்தகைய சில கருவிகளைப் பற்றி அறிவோம்.
ஏ. டி. எம்.
கார்டைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு ஏ. டி. எம். பயன்படுகிறது. இதன் முழுப் பெயர் "ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்' என்பது.
ஸி. டி. ஸ்கேன்
உடலின் உள்ளே உள்ள உறுப்புகளைப் படம்பிடிப்பதற்காக மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் படங்களைப் பார்த்துத்தான் நோய் என்னவென்று புரிந்துகொள்கிறார்கள்.
டிராபிக் கம்ப்யூட்டர்
ஆள் இல்லாமலேயே போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த இயந்திரத்தால் முடியும். சரியான டிராபிக் சிக்னல்களை இது கொடுத்துக்கொண்டிருக்கும்.
பார்கோட் ரீடர்
சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களில் இருக்கும் பார்கோடைப் பார்த்து அந்தப் பொருளின் விலையையும், விவரங்களையும் தெரிந்துகொள்வதற்குப் பயன்படும் கருவி.
சவுண்ட் மிக்ஸர்
ரெக்கார்ட் செய்த பகுதிகளை இணைத்து, பாட்டுக்களையோ, உரையாடல்களையோ முழுமைப்படுத்துவதற்குப் பயன்படும் கருவி இது.
டி. டி. பி.
முன்பெல்லாம் தனித்தனி அச்செழுத்துக்களைச் சேர்த்துதான் அச்சிடுவார்கள். ஆனால் இன்று, அச்சிடுவதிலிருந்து புத்தகம் வெளியாவது வரையுள்ள எல்லா நிலைகளிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். டி. டி. பி. யின் முழுப் பெயர் "டெஸ்க் டாப் பப்ளிஷிங்' என்பதாகும்.
டச் ஸ்கிரீன் கியோஸ்க்
ரயில் நிலையங்களிலும், பெரிய அலுவலகங்களிலும் விவரங்களை அறிந்துகொள்வதற்காக இந்தக் கருவியை வைத்திருப்பார்கள். டி.வி. திரையைப்போன்ற இதன் திரையில் விரலால் தொட்டால் நமக்குத் தேவையான விவரங்கள் திரையில் வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.